Monday 13 April 2015

வாழைப்பூ பருப்பு உசிலி


வாழைப்பூ
எடுத்த பூக்கள்













தேவை

வாழைப்பூ - 1
துவரம்பருப்பு - 3/4 கப்
கடலைப் பருப்பு - 1/2 கப்
மிளகாய்வற்றல் - 8-9
பெருங்காயப்பொடி - 1/4 தேக்கரண்டி  
மஞ்சள்பொடி - 1/4 தேக்கரண்டி
எண்ணை  - 4 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி 
உப்பு - தேவையான அளவு 

செய்முறை
வாழைப்பூவை ஆய்ந்து உள்ளிருக்கும் ள்ளன் என்ற காம்புகளை ஆய்ந்து,பொடியாக நறுக்கி கறுக்காமல் இருக்க சிறிது மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும். நீருடன் இரண்டு தேக்கரண்டி புளிக்  கரைசல் சேர்த்து தேவையான உப்பு, மஞ்சள்பொடி சேர்த்து வேகவிட்டு, வடிகட்டி பிழிந்து வைத்துக் கொள்ளவும். 

இரண்டு பருப்புகளையும் 1/2 மணிநேரம் ஊறவைத்து, அத்துடன் மிளகாய், உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும். 


அரைத்த  பருப்பு


அதில் மஞ்சள்பொடி, பெருங்காயப்பொடி சேர்த்து நன்கு கலந்து, ஒரு தட்டில் அடை போல தட்டி வைத்து குக்கரில் வேகவிடவும். 


குக்கரில் வேகவைக்க



வெந்ததை எடுத்து சற்று ஆறியதும் மிக்சியின் சின்ன கப்பில் போட்டு விப்பரில் ஒரு வினாடி சுற்றினால் நன்கு பூப்போல் உதிர்ந்து விடும்.

விப்பரில் சுற்ற


வாணலியில் எண்ணை விட்டு, கடுகு தாளித்து அதில் உதிர்த்த பருப்பு,  வேகவிட்ட வாழைப்பூ சேர்த்து 10 நிமிடம் கிளறவும். அடுப்பை சிறிதாக வைக்கவும். அருமையான வாழைப்பூ உசிலி சாதத்துடன் பிசைந்தும், தொட்டுக் கொண்டும் சாப்பிடலாம். 

மணக்கும் உசிலி

நார்ச் சத்து நிறைந்த வாழைப்பூ உடலுக்கு நலம் பயக்கும்.

No comments:

Post a Comment