Sunday 24 May 2015

சோலே பட்டூரே

நம் ஊரில் சோலாபூரி என்றுசொல்லப்படும் இந்த சிற்றுண்டி வடநாடுகளில் சோலே பட்டூரே எனப்படும். இதற்கு பூரியை கோதுமைமாவில் செய்யக் கூடாது. மைதாவில் செய்ய வேண்டும்.









தேவை
                                 
பட்டூரே விற்கு

மைதா மாவு- 2 கப்
தயிர்-- ½ கப்
பால்- ¾ கப்
எண்ணை-- 1 டேபிள்ஸ்பூன்
சமையல்  சோடா-- 2 சிட்டிகை
உப்பு--- ½ தேக்கரண்டி
எண்ணை---  வேகவிட

சன்னாவிற்கு

வெள்ளை  கொண்டைக்கடலை---- 1 கப்
பெரிய  வெங்காயம்--- 3
தக்காளி--- 2
பச்சை  மிளகாய்--- 2
இஞ்சி-- சிறுதுண்டு
பூண்டு--- 5 பல்
ஏலக்காய்--- 2
கிராம்பு--- 2
பட்டை--- சிறு துண்டு
காரப்பொடி--- 2 தேக்கரண்டி
எண்ணை---  தேக்கரண்டி
டால்டா--- 2 தேக்கரண்டி

உப்பு--- தேவையான  அளவு



செய்முறை

பட்டூராவிற்கு  கூறப்பட்டுள்ளவற்றை  ஒரு  பாத்திரத்தில்  போட்டு  நன்கு  அடித்துப்  பிசையவும். அதனை  மூன்று  மணி  நேரம்  காற்றுப்  புகாமல்  மூடி  வைக்கவும்.












கொண்டைக் கடலையை 12 மணி நேரம் நீரில் ஊற வைத்து, குக்கரில் தேவையான தண்ணீர் சேர்த்து 5, 6 சத்தம் வரும் வரை வேக விடவும்.





வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, ஏலம், கிராம்பு, பட்டை எல்லாம் சேர்த்து மிக்ஸீயில் நைஸாக அரைக்கவும்.




வாணலியில்  எண்ணையும் டால்டாவும்  சேர்த்து  வைத்து  அதில்  அரைத்த  விழுதை  எண்ணை  பிரிய  வதக்கவும்.  அதில்  தேவையான  உப்பு காரப்பொடி  சேர்க்கவும்.





வெந்த கொண்டைக் கடலையை கரண்டியால் சற்று மசிக்கவும். வேகவைத்த னீரை வீணடிக்காமல் கடலையுடன் சேர்த்து வதக்கிய விழுதில் விடவும்.




நன்கு  சேர்ந்து  கொண்டு  கெட்டியானதும்  இறக்கவும். மேலே  பொடியாக   நறுக்கிய  கொத்தமல்லி  தழை, எண்ணையில்  வதக்கிய  பச்சை  மிளகாய்  சேர்க்கவும். சன்னா  தயார்.




இனி பட்டூரா செய்வோம். பிசைந்த மாவை மேலும் நன்கு அடித்துப் பிசைந்து, பூரியைவிட சற்று திக்கான பட்டூராக்களை இடவும்.

 








 எண்ணையில்  பொரித்து  எடுத்து சன்னாவுடன்  பரிமாறவும்.





நம்  வீடுகளில்  செய்யும்  பட்டூராக்கள்  ஹோட்டல்  மாதிரி பெரிதாக  செய்ய  வேண்டாம்.  

சிறிதாகச்  செய்தால்  எண்ணை  குடிக்காது.

மைதாவில்  செய்வதால்  ஆறியவுடன்  நமுத்துவிடும்.  

சூடாக  சாப்பிட்டால்தான்  ருசியாக  இருக்கும்.

Saturday 23 May 2015

நேந்திரங்காய் வறுவல்


 தேவை
நல்ல காயான நேந்திரன் வாழைக்காய்கள்---6
உப்பு பொ டி ---2 தேக்கரண்டி
வேகவிட தேவையான எண்ணெய்
செய்முறை
நேந்திரன் காய்களை அலம்பி,காம்பையும், கீழ்பாகத்தையும் நறுக்கி விட்டு தோலியை உரித்துக் கொள்ளவும். இந்தப் பழத்தில் தோலியை நறுக்க வேண்டாம். உரித்தாலே வந்துவிடும்.

சீரான அளவில் வட்டமாக சீவி, ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் தனித்தனியாக ஒரு தட்டில் போட்டுக் கொள்ளவும். நேரடியாக எண்ணையிலும் சீவலாம். 

உப்பை அரை கப் அளவு தண்ணீரில் போட்டுக் கரைத்துக் கொள்ளவும்.

எண்ணையைக் காய வைக்கவும். நன்கு காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள வாழைத் துண்டுகளை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு வறுக்கவும். சற்று வெந்ததும், உப்புத் தண்ணீர் 1/4 ஸ்பூன் எடுத்து, வெந்து கொண்டிருக்கும் வறுவலில் விடவும். 
சலசலவென்று வெந்ததும்  எடுக்கவும்.வடியவைத்து எடுத்து வைக்கவும்.இதற்கு காரம் தேவையில்லை.


வேகும்போதே உப்புத்  தண்ணீர் விடுவதால் இதற்கு மறுபடி உப்பு போடத் தேவையில்லை.

Friday 22 May 2015

ஸ்பெஷல் வற்றல் குழம்பு


   
தேவை

சின்ன வெங்காயம் (உரித்தது) ---1 கப்
தக்காளி--- 1
சின்ன  உருளைக்  கிழங்கு--- 6
துவரம்பருப்பு--- ¼ கப்
புளி--- ஒரு  சிறு  எலுமிச்சை  அளவு
மஞ்சள்பொடி-- சிறிது

வறுத்து  அரைக்க

உளுத்தம்பருப்பு--- 1 தேக்கரண்டி
கடலைப்  பருப்பு--- 1 ½ தேக்கரண்டி
தனியா-- 2 தேக்கரண்டி
மிளகாய்  வற்றல்-- 4
வெந்தயம்--- தேக்கரண்டி
சீரகம் ----½ தேக்கரண்டி
தேங்காய்த்  துருவல்-- ¼ கப்
பெரிய வெங்காயம்--- சிறியது-- 1
தக்காளி--- பாதி

தாளிக்க

நெய்---2 தேக்கரண்டி
எண்ணெய் ----2 தேக்கரண்டி
கடுகு-- 2 தேக்கரண்டி
பச்சை  மிளகாய்---- 2
உப்புஎண்ணை --  தேவையான  அளவு
கறிவேப்பிலைகொத்துமல்லி

செய்முறை


புளியைத்  தண்ணீர்  சேர்த்து  2 கப்புகள்  வரும்படி  கரைத்துக் கொள்ளவும்.  துவரம்  பருப்பை  வேகவிட்டுக்  கொள்ளவும்.









இரண்டு  தேக்கரண்டி  எண்ணையில்  வறுக்கக்  கொடுத்துள்ள  சாமான்களை வரிசையாக  வறுக்கவும்.  தக்காளிவெங்காயத்தை  தனியாக  வதக்கவும். இவற்றோடு  4 தேக்கரண்டி  தேங்காய்த்  துருவல்  சேர்த்து  நைசாக அரைக்கவும்.மீதியுள்ள  தேங்காயை  2  தேக்கரண்டி  நெய்யில்  சற்று சிவப்பாக  வறுத்து  வைக்கவும்.









இரண்டு  தேக்கரண்டி  எண்ணையில்  கடுகு, பச்சை மிளகாய்  தாளித்து அதில்  உரித்த   வெங்காயம்பாதி  தக்காளிதோலி  நீக்கிய  உருளைக் கிழங்கு  சேர்த்து  சற்று  வதக்கவும். புளி  கரைத்த  நீரை  விடவும். மஞ்சள்பொடி  சேர்க்கவும்.



தேவையான  உப்பு  போட்டு  கொதிக்க  விடவும்.நன்கு  கொதித்து  உருளைக்கிழங்கு  வெந்ததும்  அரைத்த  கலவையையும்வெந்த  துவரம்பருப்பும் சேர்த்து  கொதிக்க  விடவும். மேலே 1 தேக்கரண்டி நெய்யை சுட வைத்து விடவும்.


வறுத்த  தேங்காய்த்  துருவலைச் சேர்க்கவும்.சேர்ந்து  கொதித்ததும்  இறக்கி  கொத்துமல்லிகறிவேப்பிலை சேர்த்து  இட்லிதோசை.  பொங்கல்வடையுடன்  பரிமாறவும்.





இந்த  சாம்பாருக்கு  பெரிய  வெங்காயம்  போட்டு  செய்தாலும் நன்றாக இருக்கும். 

சாம்பார்  கொஞ்சம்  நீர்க்க  இருந்தால்தான்  இட்லிதோசைக்கு  தொட்டுக் கொள்ள  ருசியாக  இருக்கும்.


ஹோட்டல்  சாம்பாரைவிட  இது  இன்னும் சுவையாக இருக்கும்.