Thursday 7 May 2015

மைசூர்பாகு

தேவை 

கடலை மாவு-- 1 கப்
சர்க்கரை---- 2 ¾ கப்
நெய்---2 ¼ கப் 

செய்முறை

நெய்யை ஒரு வாணலியில் சுட வைக்கவும். கடலை மாவை சலித்து அத்துடன் ½ கப் உருக்கிய நெய் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.



 

சர்க்கரையுடன் 1 கப் நீர் சேர்த்து பாகு வைக்கவும். இரண்டு விரல்களுக்கிடையில் பாகைத் தொட்டுப் பார்த்தால் கம்பி போல் நீளமாக வர வேண்டும்) வந்ததும், நெய்யில் கலந்து வைத்துள்ள கடலை மாவைக் கொட்டிக் கிளறவும்.




கேசில் இன்னொரு அடுப்பில் நெய்யை வைத்து சிம்மில் வைக்கவும்.நெய் சூடு குறையாமல் இருக்க வேண்டும். கடலைமாவும், பாகும் சேர்ந்து சுருண்டு வரும் சமயம் நெய்யை சிறிது சிறிதாகக் கரண்டியால் விட்டுக் கொண்டே கை விடாமல் கிளற வேண்டும்.




கலவை கெட்டியாகி மேலே பூத்து வரும்போது இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி உடனேயே துண்டு போட வேண்டும்.

 



சூடு ஆறியதும் வில்லைகளை எடுத்து வைக்கவும். இறக்கியவுடன் துண்டு போடாவிட்டால், மைசூர்பாகு இறுகி துண்டமாக வராது. 




சுவையான மைசூர்பாகு நாவில் போட்டால் கரையும்!





சில குறிப்புகள் 

முழுவதும் நெய் சேர்ப்பதற்கு பதிலாக டால்டாவும் கலந்து செய்யலாம்.

மைசூர்பாகு கிளறும்போது நெய்யை சூட்டுடன் விட்டால்தான் நல்ல கலராக வரும்.

பூத்து வந்ததும் உடனே தட்டில் கொட்டிவிட வேண்டும். ஒரு நிமிடம் தாமதித்தாலும் தூளாகி விடும்.

ஹல்வா, கேக்குகளை மேலே சமமாகத் தட்டுவது போல் மைசூர்பாகை தட்டக் கூடாது. தட்டில் கொட்டியவுடன் தட்டின் இரு பக்கமும் பிடித்துக் கொண்டு குலுக்கி சமமாகப் பரவச் செய்ய வேண்டும்.


No comments:

Post a Comment