Tuesday 5 May 2015

நவரத்ன அடை


Displaying navarathna adai.JPG




தேவை

பச்சை  அரிசி - கப்
துவரம்பருப்பு - ¼ கப்
கடலைப்பருப்பு - 1 பிடி
பயறு - 1 பிடி
கொத்துக்கடலை, கொள்ளு இரண்டும் சேர்த்து - 1பிடி 
கருப்பு உளுத்தம்பருப்பு - 1 பிடி 
மசூர்தால், காராமணிநிலக்கடலை மூன்றும்  சேர்த்து - பிடி
மிளகாய்  வற்றல் - 10
பெரிய  வெங்காயம் - 2
கறிவேப்பிலை - 2 கொத்து
பெருங்காயப்பொடி - சிறிதளவு
உப்பு - தேவையான  அளவு
எண்ணை 

செய்முறை

அரிசிபருப்புகளை  ஒன்றாக  சேர்த்துமிளகாய்  வற்றலுடன்தண்ணீரில்  1  மணி  நேரம்  ஊற  வைக்கவும்.

வெங்காயத்தைப்  பொடியாக  நறுக்கவும்.

ஊறவைத்த  அரிசி  பருப்பு  கலவையை  மிக்ஸியில்  சற்று  கரகரப்பாக  அரைக்கவும்.  உப்புபெருங்காயப்பொடி, நறுக்கிய  வெங்காயம்கறிவேப்பிலை சேர்த்து  நன்கு  கலக்கவும்.

கனமான  அடைக்கல்லை  கேசில்  வைத்து  மாவை  சற்று  கனமாக  ஊற்றி,நடுவில்  ஒரு  சிறிய  ஓட்டை  போட்டு  நல்லெண்ணை  விடவும். 

அடுப்பை சிறியதாக வைக்கவும். நன்குவெந்து ஓரம் சிவந்ததும், திருப்பிப்  போட்டு  தேங்காய்  எண்ணை  விட்டுமொறுமொறுப்பானதும்  எடுக்கவும்.


சாம்பார்வெண்ணைவெல்லத்துடன்  பரிமாறவும்.பல தானியம் கலந்த இந்த அடை உடலுக்கு ஊட்டம் தரும்.

No comments:

Post a Comment