Monday 16 May 2016

பூண்டு ரசம் (1)

பூண்டு ரசம் (1)

தேவை

புளி – எலுமிச்சை அளவு
துவரம் பருப்பு - ¼ கப்
கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்
தனியா - 1½ டீஸ்பூன்
மிளகாய் வற்றல் – 2
பூண்டு – 6 பல்
ரசப்பொடி - ½ டீஸ்பூன்
தக்காளி – 1
உப்பு, கொத்துமல்லி, கறிவேப்பிலை,கடுகு, நெய்

செய்முறை

இதற்குப் பெருங்காயம் தேவையில்லை. கடலைப் பருப்பு, தனியா, மிளகாய் வற்றல் போன்றவற்றை எண்ணெயில் சிவக்க வறுக்கவும். பூண்டையும் நன்கு வதக்கி எல்லாவற்றையும் சேர்த்து அரைக்கவும். புளியைக் கரைத்து உப்பு, ரசப்பொடி, தக்காளி சேர்த்து கொதிக்கும்போது அரைத்த விழுது போட்டு, ரசம் நன்கு காய்ந்து வற்றியதும் பருப்பு ஜலத்தை விட்டு விளாவி, நுரைத்த பின் இறக்கி கடுகு தாளிக்கவும்.கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்க்கவும்.

No comments:

Post a Comment