Monday 16 May 2016

பூண்டு ரசம் (2)

இதற்கு துவரம் பருப்பு அல்லது பயத்தம் பருப்பை உபயோகித்துச் செய்யலாம்.

தேவை

பயத்தம் பருப்பு - ¼ கப்
புளி – சிறு எலுமிச்சை அளவு
உப்பு, பெருங்காயம்
தக்காளி – 1
அரைக்க 
மிளகு – 2 டீஸ்பூன்
சீரகம் - 1½ டீஸ்பூன்
பூண்டு – 8 பல்
தாளிக்க 
கடுகு, நெய், கருவேப்பிலை

செய்முறை

2 கப் நீரில் புளியைக் கரைத்து அதில் உப்பு, பெருங்காயம், தக்காளி சேர்த்து,மிளகு, சீரகம் ,பூண்டு அரைத்துவிட்டு, நன்கு கொதித்து குறைந்ததும், பயத்தம் பருப்பை (வேகவிட்டது) 2கப் தண்ணீரில் சேர்த்துக் கரைத்துவிட்டு, நுரைத்ததும் இறக்கி நெய்யில் கடுகு தாளித்து கருவேப்பிலை கிள்ளி போடவும்.

No comments:

Post a Comment