Monday 2 May 2016

ஸொஜ்ஜி அப்பம்

தேவை
பூரணத்திற்கு
ரவை...1கப்
சீனி....11/2 கப்
நெய்....1/4 கப்
ஏலப்பொடி...1/2 தேக்கரண்டி
மேல்மாவிற்கு
மைதா...1 கப்
உப்பு...சிட்டிகை
கேசரி பவுடர்...சிட்டிகை
எண்ணை...2 தேக்கரண்டி
எண்ணெய் ...வேகவிட
செய்முறை
மேல்மாவுக்கு எழுதியுள்ளவற்றை தேர்த்து சிறிதளவு நீர் சேர்த்து கெட்டியாகப் பிசையவும்.


பாதியளவு நெய்யில் ரவையை சிவக்க வறுத்து அதில் 1 1/2  கப் நீர் சேர்த்து வேகவிடவும். 
வெந்து கெட்டியானதும் அதில் சீனி சேர்த்து கிளறவும். 
மீதி நெய்யை சேர்த்து கெட்டியாகக் கிளறவும். ஏலப்பொடி சேர்த்து சிறு உருண்டைகளாக்கவும்.






 வாழை இலை அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் எண்ணையைத் தடவி பிசைந்த மைதாவை கையால் சிறிய வட்டமாக்கி அதனுள் பூரணம் வைத்து நன்கு இழுத்து மூடி உள்ளங்கையால் சிறு அதிரசம் போல் தட்டி, எண்ணையை சுட வைத்து அதில் சிவக்க வேகவிட்டு எடுக்கவும்.



No comments:

Post a Comment