Friday 13 May 2016

ஸ்பெஷல் வற்றல் குழம்பு

தேவை
சின்ன வெங்காயம்...10
பொடியாக நறுக்கிய பெ.வெங்காயம்...அரை கப்
பொடியாக நறுக்கிய தக்காளி ..அரை கப்
புளி....சிறு எலுமிச்சை அளவு
காரப்பொடி...2 டீஸ்பூன்
ம.பொடி....1/2 டீஸ்பூன்
தனியாபொடி....1 டீஸ்பூன்
உப்பு...தேவையான அளவு
வறுத்து அரைக்க
உ.பருப்பு....1 டீஸ்பூன்
தனியா....11/2 டீஸ்பூன்
மி.வற்றல்....3
கசகசா....1/2 டீஸ்பூன்
தேங்காய்....4 டீஸ்பூன்
நல்லெண்ணெய்....8 டீஸ்பூன்
தாளிக்க
கடுகு....1 டீஸ்பூன்
வெந்தயம்....1/2 டீஸ்பூன்
க.பருப்பு....1டீஸ்பூன்
சீரகம்....1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை
2 டீஸ்பூன் எண்ணெயில் கசகசா, உ.பருப்பு, தனியா, மி.வற்றல்,தேங்காய் வறுத்து எடுத்து அதிலேயே நறுக்கிய வெங்காயம் வதக்கி எல்லாம் சேர்த்து நைசாக அரைக்கவும்.
மீதியுள்ள எண்ணெயில் கடுகு, சீரகம்,க.பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து, அதில் சின்ன வெங்காயம் வதக்கவும்.
அதிலேயே தக்காளி, அரைத்த விழுது சேர்த்து சுருள வதக்கவும்.
அதில் ம.பொடி, தனியா பொடி, காரப்பொடி போட்டு வதக்கி புளியைக் கரைத்து விடவும்.
தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
கெட்டியானதும் இறக்கவும்.
இதில் முள்ளங்கி, முருங்கை, கத்தரி சேர்த்தும் செய்யலாம்.
மணத்தக்காளி, சுண்டை வற்றல் சேர்த்தும் செய்யலாம்.

No comments:

Post a Comment