Sunday 22 May 2016

அரு நெல்லி ரசம்

தேவை
அரு நெல்லிக்காய் – 10 -15
துவரம் பருப்பு - ¼ கப்
உப்பு, பெருங்காயம், இஞ்சி – சிறு துண்டு
பச்சை மிளகாய் –  2
ரசப்பொடி - 1½ டீஸ்பூன்
கடுகு, நெய், கொத்துமல்லி, தக்காளி
செய்முறை
அரு நெல்லிக்காயை கொட்டையை நீக்கி மிக்ஸியில் நைஸாக அரைத்து 2 கப் நீர் சேர்த்து அதில் பெருங்காயம், உப்பு, ரசப்பொடி, தக்காளி சேர்த்து கொதிக்க விடவும்.
இஞ்சியைத் துருவிப்போட்டு 1 பச்சை மிளகாயைக் கிள்ளிப் போடவும்.
நன்கு கொதித்துப் பொடி வாசனை போனதும், வேகவிட்ட பருப்பை நீருடன் சேர்த்துத் தேவையான அளவு விளாவி நுரைத்து இறக்கி நெய்யில் கடுகு, பச்சை மிளகாய் தாளித்து கொத்து மல்லி கிள்ளிப் போடவும். இதற்குப் புளி தேவையில்லை. நெல்லிக்காயின் புளிப்பே போதும். தேவையெனில் ½ மூடி எலுமிச்சம் பழம் பிழியவும்.

No comments:

Post a Comment