Wednesday 18 May 2016

தோசை மிளகாய் பொடி

தேவை
மிளகாய் வற்றல் -  50 கிராம் 
கடலை பருப்பு - அரை கப் 
உளுத்தம் பருப்பு - அரை கப்புக்கு கொஞ்சம் குறைவாக 
கருப்பு எள் - கால் கப்
பெருங்காயம் ஒரு சின்ன துண்டு
உப்பு - தேவையான அளவு 
புளி - கொட்டைப்பாக்கு அளவு 
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்
செய்முறை
கருப்பு எள்ளை நன்கு களைந்து,கல் அரித்து வடிகட்டவும்.
வறட்டு வாணலில் 'பட பட' வென பொரியும் வரை வறுக்கவும்.
வாணலில் எண்ணெய் விட்டு பெருங்காயத்தை பொரித்து எடுத்து அதிலேயே உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பை சிவக்க வறுக்கவும்.
மிளகாய் வற்றலைக் காம்பை நீக்கி கருகாமல் வறுக்கவும்.
முதலில் எள்ளை மிக்ஸியில் லேசாக ஒரு சுற்று சுற்றி பொடி செய்யவும். அதிகமாக அரைத்தால் நீர் விட்டு கொழகொழப்பாகிவிடும்.
பருப்புகளை சற்று கரகரப்பாகப் பொடி செய்து எடுக்கவும். பெருங்காயம், மிளகாய் வற்றல், உப்பு, புளி சேர்த்து நல்ல நைசாக அரைக்கவும்.
கடைசியில் சர்க்கரை சேர்த்து ஒரு சுற்று சுற்றி, அரைத்த எள், பருப்புகளை சேர்த்து விப்பரில் அரைத்து நன்கு கலந்து எடுத்து வைக்கவும்.
இட்லி, தோசைக்கு சுவையான மிளகாய்ப்பொடி இது. தயிர் சாதத்திற்கும் நல்ல மேட்ச்!




No comments:

Post a Comment