Thursday 26 May 2016

அடைமாவு குணுக்கு

முதல் நாளைய அடைமாவு - ஒரு கப் 
கேரட் துருவல் - 1/4 கப்
நறுக்கிய வெங்காயம்  - 1/4 கப்
ஊறவைத்த ரவா - கால் கப்
உப்பு - கால் தேக்கரண்டி
அரிசிமாவு - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - ஒரு கப்
கேரட்டை தோல் சீவி துருவிக் கொள்ளவும். ரவாவை மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். மற்றப் பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அடைமாவுடன் துருவிய கேரட், நறுக்கிய வெங்காயம்,ஊற வைத்த ரவா மற்றும் கால் தேக்கரண்டி உப்பு சேர்த்துக் கலந்துக் கொள்ளவும்.
இவற்றை ஒன்றாக கலந்தப் பின்னர் மாவு கெட்டியாக அதனுடன் அரிசிமாவு கலந்துக் கொள்ளவும்.
பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறு சிறு உருண்டைகளாக கிள்ளி போடவும்.
இருப்பக்கமும் வெந்து பொன்னிறமானதும் எடுக்கவும். லேசான புளிப்புடன் குணுக்கு சுவையாக இருக்கும்.
தேங்காய் சட்னி அல்லது தக்காளி ஸாஸ் தொட்டுக் கொண்டு சாப்பிடவும்.

No comments:

Post a Comment