Monday 23 May 2016

பத்திய ரசம்

உடல் நிலை சரியில்லாத போதும், அஜீரணம் போன்ற வயிற்று உபாதைகளின் போதும் பருப்பு சேர்த்து ரசம் செய்தால் எளிதில் ஜீரணம் ஆகாது. அச்சமயங்களில் இந்த ரசம் வயிற்றுக்கு நல்லது. தக்காளி சேர்க்கக் கூடாது.

தேவை
புளி – எலுமிச்சை அளவு
உப்பு, கறிவேப்பிலை
கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்
தனியா - 1½ டீஸ்பூன்
மிளகு - ½ டீஸ்பூன்
மிளகாய் வற்றல் – 4
சீரகம் – 1 டீஸ்பூன்
நெய், கடுகு

செய்முறை


புளியை 2 கப் நீரில் கரைத்து உப்பு, கறிவேப்பிலை சேர்த்துக் கொதிக்க விடவும். கடலைப் பருப்பு, தனியா, மிளகு, மிளகாய் வற்றல் போன்றவற்றை எண்ணையில் சிவக்க வறுத்து அரைத்து சேர்த்துக் கொதிக்க விடவும். சீரகம், கருவேப்பிலையை நீரில் ஊறவைத்து அரைக்கவும். ரசம் புளி வாசனை போக கொதித்து வற்றியதும், சீரகம், கருவேப்பிலை அரைத்த விழுதில் மேலும் நீர் சேர்த்து, விளாவி நுரைத்து வந்தபின் இறக்கி நெய்யில் கடுகு தாளிக்கவும்.

No comments:

Post a Comment