Sunday 15 May 2016

எக்லேஸ் ஆப்பிள் கேக் (Eggless Apple Cake)






 ஆப்பிள் - 2 
மைதா - ஒரு கப்
சர்க்கரை - அரை கப் முதல் ஒரு கப் வரை
பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி
லேசாகப் புளித்த மோர் - 3/4 கப்
காய்ந்த திராட்சை - 15



ஒரு பாத்திரத்தில் மைதா, சர்க்கரை, பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு கலக்கவும்.



ஆப்பிளை நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கவும். நறுக்கிய ஆப்பிள், திராட்சைகளை மைதா கலவையுடன் கலந்து, மோர் சேர்த்து மிருதுவாகக் கலக்கவும்.



கேக் செய்யும் பாத்திரத்தில் மைதாமாவு தடவி, அதில் இந்த கலவையை சீராகக் கொட்டவும்.


ஓவனை முன்னமே சூடு செய்து (ப்ரீ ஹீட்) வைத்து அதில் கேக் ட்ரையை வைத்து 180 டிகிரி சென்டிக்ரேடில் 30 முதல் 45 நிமிடங்கள் பேக் செய்யவும்.



 வெளியே எடுத்து ஆறியதும் மேலே சர்க்கரைப் பொடியை தூவி விரும்பியபடி அலங்கரிக்கவும். ஐஸிங்கும் செய்யலாம். அவரவர் விருப்பம்.செய்வதற்கு சுலபமான இந்த கேக் சுவையிலும் அருமையாக இருக்கும்.


No comments:

Post a Comment