Thursday, 9 March 2017

கோதுமை மாவு பர்ஃபி


தேவை
கோதுமை மாவு - அரை கப்
சர்க்கரை - 3/4 கப்
தண்ணீர் - கால் கப்
நெய் - 1/2 கப் 
ரோஸ் எசன்ஸ் - கால் தேக்கரண்டி
ரோஸ் கலர் - ஒரு சிட்டிகை
பாதாம், முந்திரி துண்டுகள் 
ஏலப்பொடி - 1/2 டீஸ்பூன்

செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து, 2 தேக்கரண்டி நெய் விட்டு, சூடானதும் கோதுமை மாவைச் சேர்த்து நன்றாக கலர் மாறாமல் வறுத்து, தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

அதே வாணலியில் தண்ணீர், சர்க்கரை சேர்த்து ஒரு கம்பிப் பாகு பதம் வரும்வரை கொதிக்கவிடவும். 

இதில் ரோஸ் எசன்ஸ், ரோஸ் கலர் சேர்த்து கலந்துவிடவும். கேஸை சிறிதாக வைத்து இத்துடன் வறுத்து வைத்துள்ள கோதுமை மாவைச் சேர்த்து கைவிடாமல் நன்கு கிளறவும்.பாத்திரத்தில் ஒட்டும்போது மீதமுள்ள நெய்யை சேர்க்கவும்.

நெய்யில் வறுத்த மிந்திரி, பாதாம்,  ஏலப்பொடி சேர்க்கவும்.

சற்று கெட்டியானதும்,அடுப்பை அணைத்து விட்டு கெட்டியாகும் வரை கைவிடாமல் கிளறவும்.

வாணலியில் ஒட்டாத பதத்துக்கு வந்தவுடன், நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தவும்.

லேசாக ஆறியவுடன் துண்டுகள் போடவும்.

ரோஸ் வண்ண கோதுமை மாவு பர்ஃபி  சுவையான இனிப்பு.

No comments:

Post a Comment