Monday, 15 April 2019

காய உருண்டை

தே.பொருட்கள்:
பச்சரிசி.        100 கிராம்
வெல்லம்.     100 கிராம்
எள்ளு.            25 கிராம்
சுக்கு.             10 கிராம்
மிளகு.             2 ஸ்பூன்
நெய்.              3 மே.கரண்டி
செய்முறை:
வெறும் வாணலியில்  மேற்கூறிய அனைத்து பொருட்களையும் வெல்லம் தவிர்த்து நன்கு வாசனை வரும் வரை  தனி தனியாக வறுத்து எடுத்து கொள்ளவும். மிக்ஸியில் நைசாக அரைத்து அதனுடன் வெல்லம் சேர்த்து அரைத்து   கொள்ளவும். இப்போது வாணலியில் நெய் ஊற்றி நன்கு காய்ந்த்தும் அரைத்து வைத்து உள்ள பொடியில் ஊற்றி உருண்டைகளாக பிடிக்கவும்.
நன்மைகள்:
இதில் சுக்கு, மிளகு சேர்ந்துள்ள தால் செரிமானத்திற்கு நல்லது.
எள்ளு ,கால்சியம் சத்து அதிகம்.
வெல்லம் இரும்பு சத்து கொண்டது. குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

No comments:

Post a Comment