Saturday, 16 May 2015

பருப்பு போளி


தேவை

பூரணத்திற்கு...

கடலைப் பருப்பு -1 கப்
வெல்லம்-கப்
சர்க்கரை-¼ கப்
தேங்காய்த் துருவல்-½ கப்
ஏலப்பொடி-½ டீஸ்பூன்  
மேல்மாவிற்கு...மைதாமாவு- கப்
உப்பு-1சிட்டிகை
கேசரிபவுடர்-2 சிட்டிகை
 நல்லெண்ணெய்-5 டேபிள்ஸ்பூன்

நெய்  




செய்முறை

மேல் மாவிற்கு...


மைதாமாவுடன் உப்பு, கேசரி பவுடர்,,நல்லெண்ணெய் சேர்த்து கலந்து, தேவையான  நீர் சேர்த்து கெட்டியாகப் பிசையவும்.






கடலைப் பருப்பை ½ மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து குக்கரில் வேகவைக்கவும். 


 











வெந்தபருப்பில் தண்ணீரை வடித்துவிட்டு, அத்துடன் வெல்லம், சர்க்கரை,  தேங்காயைப் போட்டு,வெல்லம் கரைந்து சேர்ந்து கொள்ளும்வரை கிளறி இறக்கி ஆறவிடவும். 
















மிக்சியில் நைசாக அரைக்கவும்.ஏலப்பொடி சேர்த்து கலக்கவும். பூரணம் கெட்டியாக இல்லாவிடில், ஒரு வாணலியில் 3 ஸ்பூன் நெய் விட்டு, அதில் பூரணத்தைப் போட்டு சற்று கிளறினால் கெட்டியாகிவிடும். அதை சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.














ஒரு சிறிய இலை ஏட்டில் எண்ணெயைத் தடவிக்கொண்டு, பிசைந்த மாவை சிறு உருண்டை எடுத்து கையிலும் எண்ணெய் தொட்டுக்கொண்டு  வட்டமாக தட்டி அதில் பூரண உருண்டையை வைத்து சுற்றிலும் இழுத்து மூடி, பூரணம் வெளியில் வராதவாறு வட்டமாகத் தட்டவும்.








அடுப்பில் தோசைக் கல்லைக் காயவைத்து, அதில் போளியை இலையுடன் போடவும். உடன் இலையை மெதுவாகப் பிரித்து எடுக்கவும். இல்லை கிடைக்காவிட்டால் திக்கான பிளாஸ்டிக் பேப்பரில் இட்டு, மெதுவாகக் கையால் எடுத்துப் போடவும்.போளியை சுற்றி சிறிது நெய் விட்டு வெந்ததும் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.மேலே சிறிது நெய் சேர்த்து பரிமாறவும்.


No comments:

Post a comment