தேவை
இட்லி அரிசி 1/2 கப்
பச்சை அரிசி 1/2 கப்
ஜவ்வரிசி 1 மேஜைக்கரண்டி
சீரகம் 1/4 தேக்கரண்டி
ஓமம் 1 சிட்டிகை
பச்சை மிளகாய் 10
பெருங்காயம் 1 சிட்டிகை
உப்பு தேவையான அளவு
பச்சை அரிசி 1/2 கப்
ஜவ்வரிசி 1 மேஜைக்கரண்டி
சீரகம் 1/4 தேக்கரண்டி
ஓமம் 1 சிட்டிகை
பச்சை மிளகாய் 10
பெருங்காயம் 1 சிட்டிகை
உப்பு தேவையான அளவு
செய்முறை
இட்லி அரிசி, பச்சை அரிசி மற்றும் ஜவ்வரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து பின்னர் அரிசிகளை தண்ணீரில் குறைந்தது 5 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். அரிசியை மற்றும் ஜவ்வரிசியை வடித்து விட்டு மிக்ஸியில் நைசாக நன்றாக அரைக்கவும். பச்சை மிளகாயை மிக்ஸியில் விழுதாக அரைத்து கொள்ளவும்.

மாவு அரைத்த பிறகு அதில் சீரகம், பெருங்காயம், ஓமம்,
தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்கு கலக்கவும். பச்சை மிளகாய் விழுதை
மாவு கலவையுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த கலவையை 2 மணி
நேரம் புளிக்க வைக்க வேண்டும்.
இலை வடகம் தட்டுகள் கடையில் கிடைக்கும். அவற்றில் இலையை வட்டமாக வெட்டிப் போட்டு, அந்த இலையின் மீது ஒரு கரண்டி மாவை ஊற்றி மெலிதாகத் தேய்க்க வேண்டும். . .
இப்பொழுது அதை ஆவியில் வேக வைக்கவும். இது வேக 1 நிமிடம் தான் ஆகும்.இலைவடகத்தட்டு இல்லையெனில் தனித்த தட்டுகளில் குக்கரில் வைத்து வேகவிடவும்.
சூடாக உள்ள போதே வடகத்தை இலையில் இருந்து வெகு சுலபமாக (
ஈசியாக ) எடுத்து விடலாம். இதேபோல் அனைத்து மாவையும் வேகவைத்து எடுத்து
கொள்ளவும்.
தனித்தனியாக ஒரு பிளாஸ்டிக் பேப்பர் அல்லது தினசரி பேப்பரில் போட்டு காய வைக்கவும்.
தனித்தனியாக ஒரு பிளாஸ்டிக் பேப்பர் அல்லது தினசரி பேப்பரில் போட்டு காய வைக்கவும்.
நேரடியாக வெயிலில் வைத்தால் 2 அல்லது 3 மணி நேரத்துல
காய்ந்து விடும்.
காற்று புகாத டப்பாவில் போட்டு பத்திர படுத்தி கொள்ளாம்.