Saturday 2 July 2016

மலாய் பேடா

பால் – 1 லிட்டர் 
சீனி – 150 கிராம்
சோளமாவு – 1 டீஸ்பூன் (நீரில் கரைக்கவும்)
ஏலப்பொடி, பிஸ்தா. 

செய்முறை
பாலை அடுப்பில் வைத்து கோவா பதம் வரும் வரை கிளறவும். அடுப்பை சிறிதாக வைத்து அடி பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவும். 

நல்ல கெட்டியானதும், சர்க்கரை, சோளமாவு சேர்த்துக் கிளறவும். ஏலப்பொடி சேர்க்கவும். 

கெட்டியாக பந்து போலான கலவையை ஆற விடவும். அவற்றை சிறிய உருண்டையாக்கி, நடுவில் கட்டை விரலால் அமுக்கி, அதில் ஒரு பிஸ்தா துண்டை வைத்து எடுத்து வைக்கவும். 

இதில் சர்க்கரை சேர்க்கும் போது, சில இதழ்கள் குங்குமப்பூவை பாலில் கரைத்து சேர்த்தால் அதற்கு பெயர் ‘கேஸர் மலாய் பேடா’. செய்வதற்கு எளிய இனிப்பு இது!

காஜர் கா ஹல்வா

காஜர் என்பது கேரட். இது பஞ்சாபில் செய்யப்படும் இனிப்பு.
தேவை 
கேரட் துருவல் – 1 கப்
பால் - 1/2 கப்
சர்க்கரை - 11/2 கப்
நெய் -1 கப்
கோவா - 1/4 கப்
மிந்திரி – 15
திராட்சை – 15, ஏலப்பொடி, குங்குமப்பூ.
செய்முறை
கேரட் துருவலை பாலில் குக்கரில் வேக விடவும். வெந்த கேரட்டை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். 

அடி கனமான பாத்திரத்தில் இதைப் போட்டு கொதிக்க விட்டு, சற்று கெட்டியானதும் இதில் கோவா, சர்க்கரை போட்டு, சேர்ந்து கொண்டதும், நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கிளறவும். 

ஹல்வா பதம் வந்ததும் மிந்திரி, திராட்சை, ஏலப்பொடி, குங்குமப்பூ சேர்த்து இறக்கவும்.

பாம்பே மிக்சர்

தேவை   
கடலை மாவு – 2 கப்
அரிசி மாவு – 1 கப்
பச்சைப் பயறு – 25 கிராம்
நிலக்கடலை – 50 கிராம்
முந்திரி – 25 கிராம்
சாட் மசாலா – 1 டீஸ்பூன்
உப்பு – அம்சூர் பவுடர் -1/2 டீஸ்பூன்
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -2 கொத்து
திராட்சை – 10 கிராம்
எண்ணெய், விழுது நெய் – 6 டேபிள் ஸ்பூன்
காரப்பொடி – 1 டீஸ்பூன்
அவல் – 1 கப்
சோடா உப்பு – ஒரு சிட்டிகை.
செய்முறை

ஓமப்பொடி தயாரிக்க
1/2 கப் கடலை மாவுடன்1/4 கப் அரிசி மாவு, உப்பு, 2 டீஸ்பூன் நெய் சேர்த்துப் பிசைந்து ஓமப்பொடி அச்சில், காய்ந்த எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.
காரா சேவை தயாரிக்க:
1/2 கப் கடலை மாவுடன்1/4 கப்புக்கு சற்று குறைவாக அரிசி மாவு சேர்த்து, உப்பு, காரப்பொடி, விழுது நெய் மூன்று டீஸ்பூன் சேர்த்து காராசேவை தயாரிக்கவும்.
பூந்திக்கு:
1/2 கப் கடலை மாவுடன் மீதமுள்ள சிறிது அரிசி மாவைச் சேர்த்து, உப்பு, சோடா உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு போல் கரைத்து பூந்தி தயாரிக்கவும்.
பச்சைப் பயறை இரண்டு மணி நேரம் நீரில் ஊறவைத்து வடிகட்டிப் பரவலாக சற்று உலர்த்தவும்.
எண்ணெயைக் காயவைத்து பாசிப் பயறை கை கையாகப் போட்டு வறுத்து எடுக்கவும். அவலையும் சுத்தம் செய்துவிட்டுப் பொரித்து எடுக்கவும். முந்திரி, திராட்சை, கறிவேப்பிலை ஆகியவற்றையும் வறுக்கவும்.
ஓமப்பொடி, காரா சேவை, பூந்தி, வறுத்த பயறு, அவல், முந்திரி, திராட்சை, கறிவேப்பிலை இவற்றை ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு அத்துடன் காரப்பொடி, உப்பு, சாட்மசாலா, அம்சூர் பொடி, சர்க்கரை சேர்த்து 2 டீஸ்பூன் நெய்யை உருக வைத்து ஊற்றி நன்கு கலக்கவும். 

இனிப்பு, புளிப்பு, காரம் கலந்த சுவையுடன் பாம்பே மிக்ஸர் மிக ருசியாக இருக்கும்.

சக்லி(மகாராஷ்டிரா)

தேவை 
கடலைப் பருப்பு    -      1 கிலோ
பச்சரிசி                -      2 கிலோ
உளுத்தம் பருப்பு    -      1 கப்
பயத்தம் பருப்பு            - 1/2 கப்
அவல்                   -      2 கப்
சீரகம்                   -      50 கிராம்
தனியா                 -      50 கிராம்
பொட்டுக்கடலை   -     1/2    
ஓமம் --4 டேபிள் ஸ்பூன்
உப்பு, காரப்பொடி - தேவையான அளவு
எண்ணெய்  -- வேகவிட 

கடலைப் பருப்பு, அரிசியைக் களைந்து சிறிது நேரம் ஊறவைத்துக் காயவிடவும். மற்ற ருப்புகளையும், அவலையும் தனித்தனியாக வாணலியில் பொன்னிறமாக வறுத்து, அத்துடன் சீரகம், பொட்டுக்கடலை, தனியா, ஓமம் மற்றும் காய்ந்த அரிசி-கடலைப் பருப்புக் கலவையையும் போட்டு மிஷினில் நைஸாக அரைக்கவும். 

அரைத்த மாவுடன் உப்பு, காரப்பொடி சேர்த்து, சிறிது வெண்ணெயும் சேர்த்து, நீர்விட்டுக் கெட்டியாகப் பிசையவும்.

முள்ளுத் தேங்குழல் ஒற்றைத் துளைத் தட்டில் மாவைப் போட்டு, பிளாஸ்டிக் பேப்பரில் கைமுறுக்கு போல் வட்டமாகச் சுற்றவும்.   எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். 

சற்று அடர் சிவப்பு நிறமாக இருக்கும் சக்லி, ருசியில் ‘ஏ’ ஒன்!

சுக்கு பால்


தேவை
சுக்கு - 25 கிராம்
பச்சரிசி - 25 கிராம்
தேங்காய்ப்பூ - 1/4கப்
மிளகு - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
பனங்கல்கண்டு - 50 கிராம்
பால் - 1/2 லிட்டர்
ஏலக்காய் - 2
செய்முறை :
சுக்கை தட்டி அத்துடன் ஏலக்காய், மிளகு, பச்சரிசியை ஊற வைக்கவும்.
பாலை நன்றாக காய்ச்சவும்.
ஊறியவற்றை அரைத்து சிறிது தண்ணீர் , மஞ்சள் தூள், தேங்காய் பூ சேர்த்து அடுப்பில் வைத்துக் கூழ் பதத்திற்குக் காய்ச்சவும்.
பிறகு பால், பனங்கல்கண்டு சேர்த்து இளஞ்சூட்டில் பருகவும்.