ஞாயிறு, 3 ஜூலை, 2016

பாம்பே மிக்சர்

தேவை   
கடலை மாவு – 2 கப்
அரிசி மாவு – 1 கப்
பச்சைப் பயறு – 25 கிராம்
நிலக்கடலை – 50 கிராம்
முந்திரி – 25 கிராம்
சாட் மசாலா – 1 டீஸ்பூன்
உப்பு – அம்சூர் பவுடர் -1/2 டீஸ்பூன்
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -2 கொத்து
திராட்சை – 10 கிராம்
எண்ணெய், விழுது நெய் – 6 டேபிள் ஸ்பூன்
காரப்பொடி – 1 டீஸ்பூன்
அவல் – 1 கப்
சோடா உப்பு – ஒரு சிட்டிகை.
செய்முறை

ஓமப்பொடி தயாரிக்க
1/2 கப் கடலை மாவுடன்1/4 கப் அரிசி மாவு, உப்பு, 2 டீஸ்பூன் நெய் சேர்த்துப் பிசைந்து ஓமப்பொடி அச்சில், காய்ந்த எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.
காரா சேவை தயாரிக்க:
1/2 கப் கடலை மாவுடன்1/4 கப்புக்கு சற்று குறைவாக அரிசி மாவு சேர்த்து, உப்பு, காரப்பொடி, விழுது நெய் மூன்று டீஸ்பூன் சேர்த்து காராசேவை தயாரிக்கவும்.
பூந்திக்கு:
1/2 கப் கடலை மாவுடன் மீதமுள்ள சிறிது அரிசி மாவைச் சேர்த்து, உப்பு, சோடா உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு போல் கரைத்து பூந்தி தயாரிக்கவும்.
பச்சைப் பயறை இரண்டு மணி நேரம் நீரில் ஊறவைத்து வடிகட்டிப் பரவலாக சற்று உலர்த்தவும்.
எண்ணெயைக் காயவைத்து பாசிப் பயறை கை கையாகப் போட்டு வறுத்து எடுக்கவும். அவலையும் சுத்தம் செய்துவிட்டுப் பொரித்து எடுக்கவும். முந்திரி, திராட்சை, கறிவேப்பிலை ஆகியவற்றையும் வறுக்கவும்.
ஓமப்பொடி, காரா சேவை, பூந்தி, வறுத்த பயறு, அவல், முந்திரி, திராட்சை, கறிவேப்பிலை இவற்றை ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு அத்துடன் காரப்பொடி, உப்பு, சாட்மசாலா, அம்சூர் பொடி, சர்க்கரை சேர்த்து 2 டீஸ்பூன் நெய்யை உருக வைத்து ஊற்றி நன்கு கலக்கவும். 

இனிப்பு, புளிப்பு, காரம் கலந்த சுவையுடன் பாம்பே மிக்ஸர் மிக ருசியாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக