திங்கள், 23 டிசம்பர், 2019

திருவாதிரை களி


திருவாதிரை களி
தேவை
அரிசி..1 கப்
துவரம்பருப்பு..1/8 கப்
வெல்லம்..1 1/2 கப்
தேங்காய் துருவல்..1/4 கப்
மிந்திரி..10
நெய்..1/4 கப்
ஏலப்பொடி..1 டீஸ்பூன்

செய்முறை
அரிசியை வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும். துவரம்
பருப்பை 3/4 பதத்தில் வேகவிடவும்.

குக்கரில் இரண்டரை கப் தண்ணீர் கொதிக்க விடவும். அதில் வெல்லம் சேர்த்து நன்கு கரைய விடவும். அதில் தேங்காய்த் துருவல், வெந்த துவரம் பருப்பு, 4 ஸ்பூன் நெய் சேர்த்து கொதித்ததும் அரைத்த அரிசியை சேர்த்து கிளறவும்.

தண்ணீர் கொதித்ததும் குக்கரை மூடி ஆவி வந்ததும் வெயிட் போட்டு , கேஸை சிம்மில் வைக்கவும். 10 நிமிடம் கழித்து அணைத்து விடவும்.

திறந்து களியை நன்கு கிளறி விட்டு, ஏலப்பொடி சேர்த்து, மீதமுள்ள நெய்யில் மிந்திரி வறுத்துப் போட்டு நன்கு கிளறவும்.இதற்கு தொட்டுக் கொள்ள எழுகறிக் குழம்பு சூப்பர் காம்போ!

வெள்ளி, 20 டிசம்பர், 2019

ட்ரைஃப்ரூட்ஸ் பர்ஃபி

இந்த ஏகாதசிக்கு எங்காத்து குட்டிக் கண்ணனுக்கு ட்ரைஃப்ரூட்ஸ் பர்பி செய்து நிவேதனம் செய்தேன். அதன் செய்முறை இதோ...

ட்ரைஃப்ரூட்ஸ் பர்ஃபி

பாதாம்,மிந்திரி, பிஸ்தா...தலா 1/4 கப்,
வால்நட்...6
அத்திப்பழம்(figs)..5
பேரீச்சை..5
திராட்சை..10
தேங்காய்த்துருவல்..4டீஸ்பூன்
ஏலப்பொடி
நெய்..2டீஸ்பூன்
பாதாம்,மிந்திரி,பிஸ்தா,வால்நட் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும். அதை எடுத்துவிட்டு  அதிலேயே துண்டுகளாக்கிய அத்தி,பேரீச்சை மற்றும் திராட்சையை சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். நைஸாக அரைக்கக் கூடாது.
வாணலியில் நெய் விட்டு தேங்காய்த் துருவல் சேர்த்து சற்று வதக்கி, அதில் அரைத்த பாதாம் கலவையைச்  சேர்க்கவும். 5 நிமிடம் வதக்கி அதில் பேரீச்சை கலவை சேர்த்துக் கிளறவும். இரண்டு கலவையும் சேர்ந்து கொள்ள அடுப்பை சிறியதாக வைத்து 5நிமிடம்  தீயாமல்  கவனமாகக்  கிளற வேண்டும்.ஏலப்பொடி சேர்க்கவும்.
கீழே இறக்கி வைத்து  நன்கு கலந்து கை பொறுக்கும் சூட்டில்,கையில் நெய் தடவிக் கொண்டு இரண்டாகப் பிரித்து இரண்டு நீள்வட்டமாகச் செய்யவும்.
நன்கு ஆறியதும் அவற்றை வட்டமாக நறுக்கவும். நெய் தடவிய தட்டில் கொட்டி சதுர துண்டுகளாகவும் செய்யலாம். ஃப்ரிட்ஜ்ல் வைத்து உபயோகிக்கவும்.