Wednesday 22 June 2016

ராஜ்மா பட்டாணி சாதம்

தேவை
பாஸ்மதி அரிசி - 1 கப்
ராஜ்மா - 1/4 கப்
கேரட் - 1
பச்சை பட்டாணி - 1 கப்
வெங்காயம் - 1
உப்பு - தேவைகேற்ப்ப


அரைக்க 
தக்காளி - 1
பூண்டு - 1 பல்
இஞ்சி- 1 துண்டு
பச்சை மிளகாய் - 3
கொத்தமல்லி - கொஞ்சம்
காரப்பொடி - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்


தாளிக்க 
எண்ணெய் - 4  டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன் 
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பிரிஞ்சி இலை - 2

ராஜ்மாவை முதல் நாளே ஊறவைக்கவும்.மறுநாள் பட்டாணி, நறுக்கிய கேரட்டுடன் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.வேக வைத்த தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பாஸ்மதி அரிசியை நன்கு களைந்து பட்டாணி, ராஜ்மா வேகவைத்த நீருடன் மேலும் நீர் சேர்த்து உதிரியாக வேகவைத்து கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி எல்லாவற்றையும் பொடியாக நறுக்கவும்.

ஒரு வாணலியில் 3 டீஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் தாளிக்க உள்ளதைப் போட்டு தாளிக்கவும்.

பின் அதில் வெங்காயம், தக்காளி, அரைத்த மசாலாசேர்த்து பச்சை வாசனை போக, எண்ணெய்  பிரிய நன்கு வதக்கவும். அத்துடன் முன்பே பிரஷர் குக்கரில் வேக வைத்த பட்டாணி,ராஜ்மா எல்லாவற்றையும் போட்டு வதக்கவும்.
நன்றாக வதங்கியபின் அதில் வேகவைத்துள்ள சாதத்தை போட்டு, தேவையான உப்பு சேர்த்து கொஞ்சம் நெய் விட்டு ஒன்றாகக்  கலந்து மேலே கொத்தமல்லி இலை போட்டு அலங்கரித்து பரிமாறவும்.

இதற்க்கு தொட்டு கொள்ள வெங்காய, தக்காளி தயிர் பச்சடி, பொரித்த அப்பளம் நன்றாக இருக்கும்.

மாம்பழ மோர்க்குழம்பு

தேவை
மாம்பழம் - ஒன்று
கெட்டியான லேசாக புளித்த மோர் -அரை லிட்டர்
மிளகாய் வற்றல் - 2
வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன்
துவரம்பருப்பு - 2 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 1/2
இஞ்சி - ஒரு சிறு துண்டு
கடுகு - அரை டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்துமல்லி

செய்முறை:
மாம்பழத்தை தோல் சீவி கோட்டை நீக்கி வேகவிட்டு, மசித்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு  துவரம்பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய், இஞ்சி, தேங்காய்த் துருவல் சேர்த்து வறுத்து,  சிறிதளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து... மோருடன் கலக்கவும்.

இதனுடன் உப்பு, மசித்த மாம்பழக் கூழ் சேர்த்துக் கரைத்து வாணலியில் ஊற்றி, அடுப்பில் வைத்து ஒரு கொதி கொதித்து வந்ததும் இறக்கவும்.

எண்ணெயில் கடுகு தாளித்து சேர்த்து இறக்கவும்.கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்க்கவும். பிசைந்த சாதம், துவையல் சாதத்திற்கு நல்ல மேட்ச் இந்த மோர்க் குழம்பு!

பனானா இட்லி

தேவை
 ரவை – 1 கப்
துருவிய தேங்காய் – 1/4 கப்
கனிந்த பச்சை வாழைப்பழம் – 3-4 (மசித்தது)
உப்பு – 1 சிட்டிகை
ஏலப்பொடி  - 1 டீஸ்பூன்
முந்திரி துண்டுகள் - 1 டீஸ்பூன்
வெல்லம் – 1/2 கப் (தேவைக்கேற்ப)
பேக்கிங் சோடா – 1/2 டீஸ்பூன்
நெய் – 1 டீஸ்பூன்

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் மசித்த வாழைப்பழத்தைப் போட்டு, ரவை, துருவிய தேங்காய், உப்பு, வெல்லம், ஏலப்பொடி, முந்திரி துண்டுகள்பேக்கிங் சோடா சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இட்லி பதத்திற்கு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, இட்லி தட்டில் நெய்யைத் தடவி, இந்த மாவை இட்லிகளாக ஊற்றி, பாத்திரத்தின் உள்ளே வைத்து, மூடி வைத்து 15 நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும்.

இப்போது சுவையான பனானா இட்லி ரெடி!

இட்லி சினிமினி

தேவை
இட்லி – 6
அரிசி மாவு – 1 டேபிள்ஸ்பூன்
கடலை மாவு – 2 டேபிள்ஸ்பூன்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 1/2 டீஸ்பூன்
இஞ்சி- 1 தேக்கரண்டி(துருவியது)
பச்சைமிளகாய் - 1
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு -சுவைக்கு
எண்ணெய் – பொரிக்க

செய்முறை
இட்லிகளை  சதுரமாக, அல்லது வட்டமாக நறுக்கவும்.

அதனுடன் அனைத்துப் பொருட்களையும் நெய்யுடன் கலந்து நன்கு பிசிறவும்.

எண்ணெய் காயவைத்து கலந்து வைத்துள்ள இட்லிகளைப் பொரித்தெடுக்கவும். அல்லது இட்லிகளைப் பொரிக்காமல் வதக்கியும் செய்யலாம்.

கொத்தமல்லி தூவி அலங்கரிக்கச் சுவையான இட்லி சினிமினி தயார்.

இட்லிகளை இந்த மாதிரி வித்யாசமான முறையிலும், மீந்த இட்லிகளை மாலையில் இம்முறையிலும்  செய்யலாம்.

Saturday 18 June 2016

பீட்ரூட் ஹல்வா

தேவை
துருவிய  பீட்ரூட் - ஒரு கப்
பால் - ஒரு கப்
சர்க்கரை - முக்கால் கப்
நெய் - 8 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
முந்திரிப்பருப்பு - 6
சர்க்கரையில்லாத பால்கோவா - 2 டேபிள்ஸ்பூன் (உதிர்த்துக் கொள்ளவும்).

செய்முறை
அடி கனமான வாணலியில் சிறிதளவு நெய் விட்டு முந்திரியை வறுத்து எடுத்து, துருவிய பீட்ரூட் சேர்த்து வதக்கவும்.

பச்சை வாசனை போனவுடன் பாலுடன் சேர்த்து குக்கரில் வேகவிடவும்.

வாணலியில் போட்டு கிளறி, சர்க்கரை சேர்த்துக் கிளறி சேர்ந்து கொண்து, கெட்டியானதும் உதிர்த்த பால்கோவா சேர்த்து நெய்,ஏலப்பொடி, மிந்திரி   சேர்த்து மேலும் கிளறி இறக்கவும்.




ஜவ்வரிசி உப்புமா

தேவை
மீடியம் அளவு ஜவ்வரிசி – 1 கப்
தண்ணீர் – 1 கப்
நிலக்கடலை – 1/4 கப்
பச்சை மிளகாய் –5
தேங்காய்  துருவல் ​ --  1/4 கப்
எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் - 4 டீஸ்பூன்
தாளிக்க – கடுகு,சீரகம்,உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை.

செய்முறை
ஜவ்வரிசியை நன்றாக கழுவி விட்டு கால் மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு தண்ணீரை வடித்து விட்டு ஈரப் பதத்திலேயே
ஒரு மணி நேரம் ஊற வைத்து விடவும்.

நிலக்கடலையை தோல்நீக்கி,சற்று வறுத்து பொடியாக்கவும்.தேங்காய்,3 பச்சை மிளகாயை நைசாக அரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் தாளித்து
ஊறவைத்த ஜவ்வரிசியும், உப்பும் சேர்த்து சில  நிமிடங்களுக்கு வதக்கவும்.

ஜவ்வரிசி வெந்ததும், அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கிளறி, கடலைப் பொடியை சேர்த்து கிளறவும் அடுப்பை அணைத்து மேலும் ஐந்து நிமிடங்களுக்கு நன்கு மூடி வைக்கவும்.
 
பின் எலுமிச்சைச் சாறு பிழிந்து, கொத்தமல்லித் தழை தூவி நன்கு கலந்து பரிமாறவும்.

Thursday 16 June 2016

பனீர் பாயசம்

தேவை
கொழுப்பு நீக்காத பால் - 2 கப்
பன்னீர் துருவல் -  3/4 கப்
சர்க்கரை  - 1/4 கப்
கண்டஸ்ட் மில்க்  - 1/4 கப்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
முந்திரி,பாதாம் பருப்பு வகைகள்(சிறு துண்டுகளாக்கியது) ஒரு கைப்பிடி
பாதாம் பால் - 1/4 கப்
குங்குமப்பூ  - 4,5 இதழ்கள்
ரோஜா அல்லது வெனிலா எசன்ஸ் - சில துளிகள்

செய்முறை
பன்னீரை  கேரட் துருவி மூலம் துருவிக் கொள்ளவும்.15 பாதாம்களை  சூடான பாலில் ஊறவைத்து நைசாக அரைக்கவும்.

பாலை நன்கு காய்ச்சி அதில் சர்க்கரை  சேர்த்து,அந்த பால் கலவையை 5 நிமிடம் கொதிக்க விடவும். பாதாம் பாலை சேர்க்கவும்.ஏலப்பொடி மற்றும் கண்டஸ்ட் மில்க்கை சேர்க்கவும்.




ஐந்து  நிமிடம் கொதித்தபின் துருவிய பன்னீரை சேர்க்கவும். மேலும் ஐந்து நிமிடம் கொதித்த பின்  வெனிலா அல்லது ரோஜா எசன்ஸை சேர்க்கவும். குங்குமப்பூ சேர்க்கவும்.பாயசம் கெட்டியாக ஆன பின் அடுப்பை அணைக்கவும்.

இக்கலவை ஆறியவுடன் ஃப்ரிட்ஜில் வைத்து குளிரவைத்து பின்னர் பொடித்த பருப்பு கலவையை சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.




இதை கண்டஸ்ட் மில்க், எசன்ஸ் சேர்க்காமலும் செய்யலாம். திடீர் விருந்தினர்கள் வரும்போது எளிதில் செய்யக்கூடிய சுவையான பாயசம் இது.

Monday 13 June 2016

பஞ்சாபி தால் தட்கா

பஞ்சாபில் செய்யப்படும் இந்த தட்கா சப்பாத்தி, ரொட்டியுடன் சேர்த்து சாப்பிட நல்ல மேட்ச்.

தேவை
பயத்தம் பருப்பு (அ )மசூர் தால் - அரை கப்
சீரகம் - கால் டீஸ்பூன்
வெங்காயம், தக்காளி - தலா ஒன்று
பச்வ்சை மிளகாய் - 2
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
காரப்பொடி, மஞ்சள்பொடி  - தலா கால் டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
கொத்தமல்லி  - சிறிதளவு
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.




செய்முறை
பயத்தம்பருப்பை நன்கு வேக விடவும்.
வாணலியில்  எண்ணெய் விட்டு, பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து மேலும் வதக்கவும்.






அதில் மஞ்சள் தூள், காரப்பொடி சேர்த்து வதக்கவும். இதனுடன் வெந்த பயத்தம் பருப்பு, தேவையான அளவு தண்ணீர், உப்பு  சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.





நெய்யில் சீரகம், மிளகாய் வற்றல்,கரம் மசாலா சேர்த்து தாளித்து தட்காவில் கொட்டவும்.
எலுமிச்சைச் சாறு சேர்த்து, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.





துளசி கஷாயம்

தேவை
துளசி - 2 கைப்பிடி,
சுக்கு - 1 துண்டு,
மிளகு - 20,
ஏலக்காய் - 5,
தனியா - 2 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த திராட்சை - 20,
பனங்கல்கண்டு
அல்லது பனைவெல்லம் - தேவைக்கேற்ப.

செய்முறை
சுக்கு, மிளகு, தனியாவை ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். 

அத்துடன் துளசியும் காய்ந்த திராட்சையும் சேர்த்து, 3 டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். 

அது பாதியாக சுண்டியதும், வடிகட்டி, பனங்கல்கண்டோ, பனைவெல்லமோ சேர்த்துப் பரிமாறவும்.

வயிற்றில் ஏற்படும் மந்தம் நீக்கி, தொற்று வராமல் காக்கும் .சளி பிடிக்காமல் தடுக்கும்.

Wednesday 8 June 2016

பீஸ் பனீர் புலாவ்

பச்சை பட்டாணி - 1/2 கப்
(காய்ந்த பட்டாணியாக இருந்தால் முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.)
பனீர் - 100 கிராம்
(சிறிய சதுரங்களாக வெட்டி எண்ணையில் இளஞ்சிவப்பாக பொரித்து வெதுவெதுப்பான நீரில் போட்டு வைக்கவும்.)
பாசுமதி அரிசி - 1 கப்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
நெய் - 3 டீஸ்பூன் 
எண்ணெய் - 6 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தேங்காய்ப்பால் - 1/2 கப்
மல்லி தழை - சிறிது
அரைக்க:
பச்சைமிளகாய் - 3
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 6 பல்
தாளிக்க
பிரிஞ்சி இலை -2
கறிவேப்பிலை - சிறிது
ஏலக்காய் - 2
கிராம்பு - 2
பட்டை - சிறு் துண்டு
நெய் - 3 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
முந்திரி, திராட்சை - தேவைக்கு



செய்முறை

காய்ந்த பட்டாணியாக இருந்தால் இரவே ஊற வைத்துக் கொள்ளவும். பச்சைப் பட்டாணி என்றால் உடனடியாக சமைக்கலாம்.

பாசுமதி அரிசியைக் களைந்து நீரை வடிய வைத்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும்.

இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்தவைகளை போட்டு தாளிக்கவும்.



அதனுடன் வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை போட்டு வதக்கி பட்டாணியும் சேர்த்து நன்கு வதக்கவும்.



அதில் அரைத்த மசாலாவை போட்டு பச்சை வாசனை போக வதக்கி தேங்காய்ப் பாலுடன், மேலும் 3/4 கப் நீர் சேர்த்து, உப்பு சேர்த்து குக்கரை மூடி, ஆவி வந்ததும் வெய்ட் போடவும்.

கேஸை சிம்மில் வைத்து 10  நிமிடம் வைத்திருந்து அணைக்கவும்.மூடியை திறந்து பனீர் துண்டுகளை சேர்க்கவும்.

நெய்யில் மிந்திரி, திராட்சை, கரம் மசாலா சேர்த்து வதக்கி புலாவில் சேர்க்கவும்.

நறுக்கிய கொத்துமல்லி தழை சேர்த்து ஒரு முறை அடி வரை கிளறி விட்டு பின் பரிமாறவும். சுவையான பீஸ் புலாவ் ரெடி.



ராய்தா, பொரித்த அப்பளத்துடன் சாப்பிடவும்.

Tuesday 7 June 2016

மிக்ஸட் வெஜிடபிள் குருமா


பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சைப் பட்டாணி -1/2 கப்
சிறிதாக நறுக்கிய பீன்ஸ், உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர், கேரட்- தலா 1/2 கப்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் -1 1/2  டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2  டீஸ்பூன்
எண்ணெய் - 5 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
தயிர் - 1/2 கப்
பிரிஞ்சி இல்லை - 2
எண்ணெய் - 5 டீஸ்பூன்
அரைக்க
தேங்காய்த் துருவல் - 1/4 கப்
முந்திரிப் பருப்பு -10 ( வெந்நீரில் ஊற வைக்கவும்.)
பச்சை மிளகாய் -2
சீரகம் - 1 டீஸ்பூன்
கிராம்பு, லவங்கப்பட்டை - 2
ஏலக்காய் - 2



செய்முறை
காய்கறிகளை தேவையான நீரில் வேக வைக்கவும். நீரை வடியவைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

தேங்காய், சீரகம், முந்திரிப் பருப்பு, சீரகம், ப.மிளகாய், கிராம்பு, லவங்கப்பட்டை ஏலம் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்துக்கொள்ளவும். 



கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும், இதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி துண்டுகள் சேர்த்து நன்கு வதக்கவும். 




 அத்துடன் அரைத்த விழுது சேர்த்து வதக்கி, கெட்டியானதும் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலா சேர்த்து கிளறவும்.தயிர் சேர்த்து நன்கு வதக்கவும்.




வெந்த காய்கறிகள் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து வேகவைத்த நீர் சேர்த்து கிளறவும். சற்று கொதித்து கெட்டியானதும் இறக்கவும்.கொத்துமல்லி சேர்த்து, சப்பாத்தி, ரொட்டி, புலாவுடன் பரிமாறவும்.