நம் ஊரில் சோலாபூரி என்றுசொல்லப்படும்
இந்த சிற்றுண்டி வடநாடுகளில் சோலே பட்டூரே எனப்படும். இதற்கு பூரியை கோதுமைமாவில்
செய்யக் கூடாது. மைதாவில் செய்ய வேண்டும்.
தேவை
பட்டூரே
விற்கு
மைதா மாவு- 2 கப்
தயிர்-- ½
கப்
பால்- ¾
கப்
எண்ணை-- 1
டேபிள்ஸ்பூன்
சமையல் சோடா-- 2
சிட்டிகை
உப்பு--- ½ தேக்கரண்டி
எண்ணை--- வேகவிட
சன்னாவிற்கு
வெள்ளை கொண்டைக்கடலை---- 1 கப்
பெரிய வெங்காயம்--- 3
தக்காளி--- 2
பச்சை மிளகாய்--- 2
இஞ்சி-- சிறுதுண்டு
பூண்டு--- 5 பல்
ஏலக்காய்--- 2
கிராம்பு--- 2
பட்டை--- சிறு துண்டு
காரப்பொடி--- 2 தேக்கரண்டி
எண்ணை--- 3 தேக்கரண்டி
டால்டா--- 2 தேக்கரண்டி
உப்பு--- தேவையான அளவு
செய்முறை
பட்டூராவிற்கு கூறப்பட்டுள்ளவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு அடித்துப் பிசையவும். அதனை மூன்று மணி நேரம் காற்றுப் புகாமல் மூடி வைக்கவும்.
கொண்டைக் கடலையை 12 மணி நேரம் நீரில் ஊற வைத்து, குக்கரில் தேவையான தண்ணீர் சேர்த்து 5, 6 சத்தம் வரும் வரை வேக விடவும்.
வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, ஏலம்,
கிராம்பு, பட்டை எல்லாம் சேர்த்து மிக்ஸீயில் நைஸாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணையும், டால்டாவும் சேர்த்து வைத்து அதில் அரைத்த விழுதை எண்ணை பிரிய வதக்கவும். அதில் தேவையான உப்பு, காரப்பொடி சேர்க்கவும்.
வெந்த கொண்டைக் கடலையை கரண்டியால் சற்று
மசிக்கவும். வேகவைத்த னீரை வீணடிக்காமல் கடலையுடன் சேர்த்து வதக்கிய விழுதில்
விடவும்.
நன்கு சேர்ந்து கொண்டு கெட்டியானதும் இறக்கவும். மேலே பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை, எண்ணையில் வதக்கிய பச்சை மிளகாய் சேர்க்கவும். சன்னா தயார்.
இனி பட்டூரா செய்வோம். பிசைந்த மாவை மேலும் நன்கு
அடித்துப் பிசைந்து, பூரியைவிட சற்று திக்கான பட்டூராக்களை இடவும்.
எண்ணையில் பொரித்து எடுத்து, சன்னாவுடன் பரிமாறவும்.
நம் வீடுகளில் செய்யும் பட்டூராக்கள் ஹோட்டல் மாதிரி பெரிதாக செய்ய வேண்டாம்.
சிறிதாகச் செய்தால் எண்ணை குடிக்காது.
மைதாவில் செய்வதால் ஆறியவுடன் நமுத்துவிடும்.