செவ்வாய், 5 மே, 2015

மிளகு குழம்பு

 Displaying karuveppilai kuzhambu.jpg





தேவை

மிளகு--- 25  கிராம்
 கறிவேப்பிலை--- ½ கப்
சீரகம்--  3 தேக்கரண்டி
தனியா--- 2 தேக்கரண்டி
மிளகாய்  வற்றல்--- 2
புளி--- ஒரு  சிறிய  எலுமிச்சை  அளவு
பெருங்காயம்-- 1 சிறு  துண்டு
நல்லெண்ணை--- ¼ கப்
கடுகு--- 2 தேக்கரண்டி
உப்பு---தேவையான  அளவு


செய்முறை

நான்கு  தேக்கரண்டி  எண்ணையில்  முறையே  பெருங்காயம்மிளகுசீரகம்தனியாமிளகாய்  வற்றல்  ஆகியவற்றை  வரிசையாக  சிவக்க  வறுக்கவும். அவற்றை எடுத்தபின், கறிவேப்பிலையைப்  போட்டு  வதக்கவும்.  இவை  எல்லாவற்றுடன்  புளிதேவையான  உப்பு  சேர்த்து  மிக்ஸியில்  1  கப்  தண்ணீர்  சேர்த்து  நைஸாக  அரைக்கவும்.


வாணலியில்  மீதியுள்ள  எண்ணையை  விட்டுஅதில்  கடுகு  தாளிக்கவும்.  வெடித்ததும்  அரைத்த  கலவையை  விட்டு  கிளறவும். நன்கு  கெட்டியாகி  எண்ணை  பிரிந்ததும்  இறக்கவும்.

 

 




சாதத்தில்  பிசைந்து  சாப்பிடவும்தயிர்  சாதத்துக்கு  தொட்டுக்  கொள்ளவும்  அருமையாக  இருக்கும்  இந்த  மிளகுக்  குழம்பு.


இதில்  பூண்டுமுருங்கைகத்தரிக்காய்களை  வதக்கி   குழம்புடன்  சேர்த்து  கொதிக்க  விடலாம். பிள்ளை  பெற்ற  பெண்களுக்கு  நல்ல  பத்தியக்  குழம்பு  இது.  குளிர்  காலத்தில்  உடலுக்கு  சூடு  கொடுக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக