செவ்வாய், 19 மே, 2015

குடமிளகாய் சப்ஜி


தேவை

குடமிளகாய்--- 5
பெரிய வெங்காயம்--- 2
காரப்பொடி--- 2 தேக்கரண்டி
கரம் மசாலா--- 1 தேக்கரண்டி
கடலைப்பொடி--- 4தேக்கரண்டி
எண்ணை--- 5 தேக்கரண்டி
சீரகம்--- 1 தேக்கரண்டி

உப்பு--- தேவையான அளவு



செய்முறை


குடமிளகாயை சிறிய சதுர துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.






                   








கடலையை வாணலியில் வறுத்து தோலி நீக்கி மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணை விட்டு அதில் சீரகம் பொறித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதகியதும், குடமிளகாய் துண்டங்களைப் போட்டு வதக்கவும்.


சற்று வதகி சேர்ந்து கொண்டதும், அதில் உப்பு, காரப்பொடி, கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.குடமிளகாய் நன்கு வெந்ததும், செய்து வைத்துள்ள கடலைப்பொடியை சேர்த்து கிளறவும்.





இறக்கி வைத்து மேலே பொடியாக நறுக்கிய கொத்துமல்லி தழை சேர்த்து ரொட்டி, சப்பாத்தியுடன் பரிமாறவும்.




நாம் குடமிளகாயில் தேங்காய் போட்ட கறி , வதக்கல் கறி  செய்வோம். இந்த சப்ஜி மகாராஷ்டிரா ஸ்பெ ஷல். 

2 கருத்துகள்:

  1. இது செய்வேன் முன்னெல்லாம். இப்போல்லாம் செய்யறதில்லை. குடைமிளகாய் என்றாலே அவருக்கு அலர்ஜி. பண்ணினால் நான் தான் சாப்பிடணும். :)

    பதிலளிநீக்கு
  2. பின்னூட்டத்துக்கு நன்றி கீதா...உங்களவருக்கு இது பிடிக்காது, வாங்கிவிட்டு ரொம்ப கஷ்டப்பட்டதாக நீங்கள் எழுதியிருந்ததை படித்திருக்கிறேன். இது சப்பாத்திக்கு ரொம்ப நன்றாக இருக்கும். நானும் மும்பைக்கு சென்ற பிறகுதான் இந்த சப்ஜி பற்றி தெரிந்து செய்ய ஆரம்பித்தேன்.

    பதிலளிநீக்கு