கறி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கறி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 21 மே, 2016

அகத்திக்கீரை கறி

தேவை
அகத்திக்கீரை  ஒரு கட்டு 
பாசிப்பருப்பு  கால் கப் 
உளுத்தம்பருப்பு  அரை டீஸ்பூன்
மிளகாய் வற்றல்  ஒன்று
கடுகு  அரை டீஸ்பூன்
தேங்காய் துருவல்  8 டீஸ்பூன்
சர்க்கரை  1/2 டீஸ்பூன்
எண்ணெய்  2 டீஸ்பூன்
உப்பு  தேவையான அளவு.
செய்முறை 
 அகத்திக் கீரையை ஆய்ந்து அலம்பி, நறுக்கவும். பயத்தம்பருப்பை களைந்து வடிய வைத்து பத்து நிமிடங்கள் வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,  உளுத்தம்பருப்பு, கிள்ளிய மிளகாய் வற்றல் சேர்த்து வறுத்து,
அகத்திக்கீரையையும், பாசிப்பருப்பையும் சேர்த்து, உப்பு சேர்த்து, லேசாக தண்ணீர் தெளித்து வேக விடவும். அடிக்கடி கிளறவும்.
நன்கு வெந்த உடன் தேங்காய்த் துருவல், சர்க்கரை தூவிக் கிளறி இறக்கவும்.
அகத்திக்கீரை வாய்ப்புண், வயிற்றுப் புண்ணுக்கு மிகவும் நல்லது.

சனி, 7 மே, 2016

பருப்பு உசிலி

தேவை
நறுக்கிய கொத்தவரைக்காய் -- 1 கப்
துவரம் பருப்பு -- ½ கப்
கடலைப் பருப்பு -- ¼ கப்

மிளகாய் வற்றல் -- 6
பெருங்காயம் -- சிறு துண்டு
மஞ்சள் பொடி -- ½ தேக்கரண்டி
உப்பு -- தேவையான அளவு
எண்ணை-- 4 தேக்கரண்டி
கடுகு -- 2 தேக்கரண்டி 
  
செய்முறை:
கொத்தவரைக்காயை தேவையான உப்பு, சிறுதுளி மஞ்சள் பொடி சேர்த்து வேகவிட்டு வடிகட்டவும்.
இரண்டு பருப்புடன் மிளகாய் வற்றல் சேர்த்து அரைமணி ஊறவைத்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும்.அதில் தேவையான உப்பு, ம.பொடி சேரத்து நன்கு கலக்கவும்.
வாணலியில் எண்ணை விட்டு அரைத்த விழுதை அடைபோல் தட்டி, அடுப்பை சிறிதாக வைத்து சற்று வெந்ததும் தோசைத் திருப்பியால் உதிர்த்துக் கிளறவும்.

வாணலியில் எண்ணை விட்டு அரைத்த விழுதை அடைபோல் தட்டி, அடுப்பை சிறிதாக வைத்து சற்று வெந்ததும் தோசைத் திருப்பியால் உதிர்த்துக் கிளறவும்.

சற்று ரோஸ்ட் ஆனதும், வெந்த கொத்தவரைக்காயை ன்கு பிழிந்து போட்டு சேர்த்துக் கிளறவும்.

மேலும் பத்து நிமிடங்கள் நன்கு வதக்கி இறக்கவும். சாம்பார், வற்றல் குழம்புடன் தொட்டுக் கொண்டு சாப்பிட சூப்பரான மேட்ச்!

பொடி சாதம் போல சாதத்துடன் பிசைந்து, மோர்க்குழம்பு தொட்டும் சாப்பிடலாம்.

கொத்தவரை தவிர அவரை, புடல், கோஸ், காலிஃப்ளவர், வாழைப்பூ இவற்றிலும் மேற்கூறிய முறைப்படி பருப்புசிலி செய்யலாம்.

கோஸ், காரட், பீன்ஸ், பட்டாணி இவை எல்லாம் சேர்த்து மிக்சட் வெஜிடபிள் பருப்புசிலியும் செய்யலாம். 


செவ்வாய், 19 மே, 2015

குடமிளகாய் சப்ஜி


தேவை

குடமிளகாய்--- 5
பெரிய வெங்காயம்--- 2
காரப்பொடி--- 2 தேக்கரண்டி
கரம் மசாலா--- 1 தேக்கரண்டி
கடலைப்பொடி--- 4தேக்கரண்டி
எண்ணை--- 5 தேக்கரண்டி
சீரகம்--- 1 தேக்கரண்டி

உப்பு--- தேவையான அளவு



செய்முறை


குடமிளகாயை சிறிய சதுர துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.






                   








கடலையை வாணலியில் வறுத்து தோலி நீக்கி மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணை விட்டு அதில் சீரகம் பொறித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதகியதும், குடமிளகாய் துண்டங்களைப் போட்டு வதக்கவும்.


சற்று வதகி சேர்ந்து கொண்டதும், அதில் உப்பு, காரப்பொடி, கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.குடமிளகாய் நன்கு வெந்ததும், செய்து வைத்துள்ள கடலைப்பொடியை சேர்த்து கிளறவும்.





இறக்கி வைத்து மேலே பொடியாக நறுக்கிய கொத்துமல்லி தழை சேர்த்து ரொட்டி, சப்பாத்தியுடன் பரிமாறவும்.




நாம் குடமிளகாயில் தேங்காய் போட்ட கறி , வதக்கல் கறி  செய்வோம். இந்த சப்ஜி மகாராஷ்டிரா ஸ்பெ ஷல். 

ஞாயிறு, 17 மே, 2015

பரங்கிக்காய் லட்டு கறி (கல்யாண கறி)


தேவை 

பரங்கிக்காய்--- ½ கிலோ 
உப்பு--- டீஸ்பூன் 
வெல்லம்---25 கிராம்.
துருவிய தேங்காய்---1 கப் 

தாளிக்க

கடுகு----1 டீஸ்பூன்
உடைத்த உளுத்தம்பருப்பு---2 டீஸ்பூன்
எண்ணெய்  ---1 டீஸ்பூன்
நெய்----1 டீஸ்பூன்

செய்முறை
பரங்கிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, முழுகும் அளவு தண்ணீரில் குழையாமல் வேகவிட்டு, வடிகட்டவும்.

ஒரு வாணலியில் நெய்யும், எண்ணெயும் சேர்த்து  சுட வைத்து, கடுகு போட்டு வெடித்ததும், உளுத்தம்பருப்பு சேர்க்கவும். பருப்பு சிவந்ததும், அதில் வெந்த பரங்கிக்காய் சேர்த்து, அத்துடன் வெல்லம்  சேர்த்துக் கிளறவும்.

வெல்லம் கரைந்து சேர்ந்து கெட்டியானதும், தேங்காய் சேர்த்துக் கிளறி இறக்கவும்.


பரங்கிக்காயில் இனிப்பு இருக்குமாதலால் அதிக வெல்லம் சேர்க்கக் கூடாது. 







அந்தக்கால கறிவகை இது. வத்தக் குழம்பு, காரக் குழம்புடன் சாப்பிட இது மிக ருசியாக இருக்கும்.

திங்கள், 13 ஏப்ரல், 2015

வாழைப்பூ பருப்பு உசிலி


வாழைப்பூ
எடுத்த பூக்கள்













தேவை

வாழைப்பூ - 1
துவரம்பருப்பு - 3/4 கப்
கடலைப் பருப்பு - 1/2 கப்
மிளகாய்வற்றல் - 8-9
பெருங்காயப்பொடி - 1/4 தேக்கரண்டி  
மஞ்சள்பொடி - 1/4 தேக்கரண்டி
எண்ணை  - 4 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி 
உப்பு - தேவையான அளவு 

செய்முறை
வாழைப்பூவை ஆய்ந்து உள்ளிருக்கும் ள்ளன் என்ற காம்புகளை ஆய்ந்து,பொடியாக நறுக்கி கறுக்காமல் இருக்க சிறிது மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும். நீருடன் இரண்டு தேக்கரண்டி புளிக்  கரைசல் சேர்த்து தேவையான உப்பு, மஞ்சள்பொடி சேர்த்து வேகவிட்டு, வடிகட்டி பிழிந்து வைத்துக் கொள்ளவும். 

இரண்டு பருப்புகளையும் 1/2 மணிநேரம் ஊறவைத்து, அத்துடன் மிளகாய், உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும். 


அரைத்த  பருப்பு


அதில் மஞ்சள்பொடி, பெருங்காயப்பொடி சேர்த்து நன்கு கலந்து, ஒரு தட்டில் அடை போல தட்டி வைத்து குக்கரில் வேகவிடவும். 


குக்கரில் வேகவைக்க



வெந்ததை எடுத்து சற்று ஆறியதும் மிக்சியின் சின்ன கப்பில் போட்டு விப்பரில் ஒரு வினாடி சுற்றினால் நன்கு பூப்போல் உதிர்ந்து விடும்.

விப்பரில் சுற்ற


வாணலியில் எண்ணை விட்டு, கடுகு தாளித்து அதில் உதிர்த்த பருப்பு,  வேகவிட்ட வாழைப்பூ சேர்த்து 10 நிமிடம் கிளறவும். அடுப்பை சிறிதாக வைக்கவும். அருமையான வாழைப்பூ உசிலி சாதத்துடன் பிசைந்தும், தொட்டுக் கொண்டும் சாப்பிடலாம். 

மணக்கும் உசிலி

நார்ச் சத்து நிறைந்த வாழைப்பூ உடலுக்கு நலம் பயக்கும்.

வியாழன், 20 மார்ச், 2014

வாழைக்காய் பொடிமாஸ்

தேவை

வாழைக்காய்-- 2 (பெரியது)

காரட்--- 1


தேங்காய்த்துருவல்--- 1/4 கப்


எலுமிச்சம்பழம்--- 1


பெருங்காயப்பொடி--- 2 சிட்டிகை


எண்ணை-- 4 தேக்கரண்டி


கடுகு--- 2  தேக்கரண்டி


உளுத்தம்பருப்பு--- 3 தேக்கரண்டி


இஞ்சி-- சிறுதுண்டு


பச்சை  மிளகாய்--- 3


மிந்திரி  பருப்பு--- 8


உப்பு-- தேவையான  அளவு


கறிவேப்பிலை





செய்முறை 

வாழைக்காயை  துண்டுகளாக்கி  தண்ணீரில்  தோலி  உரியும்  பதத்திற்கு  வேகவிடவும். 

ஆறியதும்  காரட்  துருவியில்  மெலிதாகச்  சீவிக்  கொள்ளவும்.
 
காரட்டையும்  துருவவும்.

இஞ்சி,  பச்சைமிளகாயை  பொடியாக  நறுக்கவும். 


வாணலியில்  எண்ணை  விட்டு  அதில்  பெருங்காயம்,  கடுகு  தாளித்து  உளுத்தம்பருப்பு,  மிந்திரி  சேர்த்து  சிவந்ததும்,  நறுக்கிய  இஞ்சி,  பச்சை  மிளகாய்,  கறிவேப்பிலை  தாளிக்கவும். 

அதில்  துருவிய  காரட்  சேர்த்து  ஒரு  நிமிடம்  வதக்கி,  அத்துடன்  துருவிய  வாழைக்காய்,  தேவையான  உப்பு  சேர்த்து  நன்கு  கிளறவும். 

மேலே  தேங்காய்த்துருவல்  சேர்த்து  நன்கு  கலந்து  இறக்கவும். 



எலுமிச்சை  சாறு  பிழிந்து  கலந்து  பரிமாறவும்.  சாம்பார்,  வற்றல்  குழம்பு  சாதத்துடன்  சாப்பிட  இந்த  பொடிமாஸ்  நன்றாக  இருக்கும்.  விருந்துகளுக்கு  ஏற்றது  இது.  

இதையே  வாழைக்காயைத்  துருவாமல்  வேகவிட்டதை  கையால்  உதிர்த்தும்  செய்யலாம்.