Monday 17 February 2020

நட்ஸ் பக்கோடா

தேவையான பொருட்கள்
எண்ணெய், உப்பு தேவையான அளவு
நெய் - 2 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி - ஒரு சிட்டிகை
சமையல் சோடா - 1சிட்டிகை
இஞ்சி -  1 சிறுதுண்டு
பச்சை மிளகாய் - 2 அல்லது 3
வெங்காயம் பெரியது- 2
அரிசி மாவு - 50கிராம்
கடலை மாவு - 100கிராம்
பாதாம் பருப்பு - 20 கிராம்
முந்திரி பருப்பு - 25கிராம்
வழிமுறைகள்
முந்திரி  பருப்பை சிறிய துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும்.
பாதாமை வெந்நீரில் ஊறவைத்து சிறு துண்டுகளாக்கவும்.
வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும்.
பச்சை மிளகாய், இஞ்சி, இவற்றை மிக்ஸில் அரைத்துக் கொள்ளவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, சமையல் சோடா, உடைத்த முந்திரி, பாதாம்  பருப்பு, வெங்காயம்,  இவற்றுடன் மிக்ஸியில் அரைத்த விழுது, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
சிறிது நெய்யை சூடாக்கி கலவையில் கொட்டவும்.
சிறிது தண்ணீர் சேர்த்து கலவையை கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் பொறிப்பதற்கு தேவையான எண்ணெயை சூடாக்கவும்.
மாவு கலவை சிறிது எடுத்துக் கொண்டு பிசிறினாற் போல் காய்ந்த எண்ணெயில் போட்டு பொறிக்கவும். சிவந்தவுடன் எடுத்து வடிய விடவும்.
இனிமையான மாலை நேர தெருக்கடை உணவு மொறு மொறு முந்திரி பக்கோடா ரெடி!  

Wednesday 12 February 2020

ரகடா பட்டீஸ்

தேவையான பொருட்கள்
பரிமாற தேவை....
பூண்டு சட்னி
க்ரீன் சட்னி
இனிப்பு சட்னி
சேவ் எனப்படும் மெலிதான ஓமப்பொடி
பொடியாக நறுக்கிய வெங்காயம்
பொடியாக நறுக்கிய தக்காளி
ஓமப்பொடி....
கடலை மாவு...1 1/2கப்
உப்பு...தேவையான அளவு
நெய்...3டீஸ்பூன்
மஞ்சள் பொடி...1/2 டீஸ்பூன்
காரப்பொடி...1/2 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி...சிறிது
மிளகுபொடி...1/4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்துமல்லி

பூண்டு சட்னி...
உப்பு....தேவையான அளவு
தனியா பொடி...1/2 டீஸ்பூன்
சீரகப்பொடி...1டீஸ்பூன்
காரப்பொடி...2டீஸ்பூன்
பூண்டுபற்கள்...15
உப்பு....தேவையான அளவு

க்ரீன் சட்னி....
எலுமிச்சை சாறு...3டீஸ்பூன்
உப்பு...1/4 டீஸ்பூன்
இஞ்சி... சிறு துண்டு
பச்சைமிளகாய்...2
நிலக்கடலை... 2 டேபிள்ஸ்பூன்
புதினா...1/4 கப்
கொத்துமல்லி...1/2 கப்

இனிப்பு சட்னி....
தண்ணீர்...1 1/2 கப்
உப்பு...1டீஸ்பூன்
காலாநமக்(கருப்பு உப்பு)....1/4டீஸ்பூன்
காரப்பொடி...1/2டீஸ்பூன்
வெல்லம்...1/4 கப்
புளி...எலுமிச்சை அளவு
விதையில்லாத பேரீச்சை...10
தண்ணீர்...1 1/2 கப்
உப்பு...1டீஸ்பூன்

பட்டீஸ் செய்ய...
உருளைக் கிழங்கு...4 (வேகவைத்து உரித்து நன்கு மசிக்கவும்)
கார்ன் ஃப்ளவர்...3டேபிள்ஸ்பூன்
உப்பு...தேவையான அளவு
எண்ணை...4டீஸ்பூன்
காரப்பொடி...1டீஸ்பூன்

ரகடாவிற்கு...
காய்ந்த பட்டாணி...1கப்
தக்காளி...1(பொடியாக நறுக்கவும்)
பெரியவெங்காயம்...1(பொடியாக நறுக்கவும்.)
எண்ணை...4டீஸ்பூன்
கறிவேப்பிலை...ஒருகொத்து
வெல்லம்...சிறுதுண்டு
கரம்மசாலா...1/2 டீஸ்பூன்
காரப்பொடி ...3/4 டீஸ்பூன்
தனியாபொடி...1டீஸ்பூன்
மஞ்சள்பொடி...1டீஸ்பூன்
இஞ்சி பச்சைமிளகாய் விழுது...2டீஸ்பூன்
சீரகம்...1டீஸ்பூன்
கடுகு...1டீஸ்பூன்
பெருங்காயத்தூள்...1/4 டீஸ்பூன்
உப்பு...தேவையான அளவு
எலுமிச்சைசாறு...2டீஸ்பூன்

செய்முறை
வழிமுறைகள்
ரகடா செய்முறை... பட்டாணியை இரவு தண்ணீரில் ஊற வைக்கவும்.
மறுநாள் குக்கரில் 5,6 சத்தம் வரும்வரை வேகவிடவும். வெளியில் எடுத்து மசித்து வைத்துக் கொள்ளவும்.
எண்ணெயைக் காயவைத்து அதில் பெருங்காயம், கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
அதில் இஞ்சி பச்சைமிளகாய் விழுது வதக்கி, அதிலேயே நறுக்கிய தக்காளி, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
நன்கு வதக்கியதும் அதில் மஞ்சள்பொடி, தனியாபொடி, காரப்பொடி, கரம்மசாலா, சேர்த்து மேலும் சற்று வதக்கவும்.
அதில் வேகவிட்ட பட்டாணி,உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். வெல்லம் சேர்க்கவும்.

பட்டீஸ் செய்முறை...உருளைக் கிழங்கை வேகவிட்டு தோலி நீக்கி உரித்து நன்கு மசிக்கவும்.
அத்துடன் கார்ன் ஃப்ளவர், உப்பு, காரப்பொடி எண்ணை சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து மூடி வைக்கவும்.
1/2 மணி கழித்து நன்கு பிசைந்து எலுமிச்சை அளவு மாவு எடுத்து உள்ளங்கையில் வட்டமாக கனமாகத் தட்டவும்.
தோசைக்கல்லை காயவைத்து அதில் பட்டீசைப் போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு இரு பக்கமும் சிவக்க வேகவிடவும். பட்டீஸ் ரெடி!

இனிப்பு சட்னி செய்முறை... புளியை ஒன்றரை கப் தண்ணீரில் ஊறவைத்து கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.
பேரீச்சையை 2 நிமிடம் நீரில் கொதிக்கவிட்டு அரைக்கவும்.
புளித்தண்ணீரை கொதிக்கவிட்டு புளி வாசனை போய் சற்று கெட்டியானதும் அதில் அரைத்த பேரீச்சை விழுது, வெல்லம், சீரகப்பொடி, காரப்பொடி, காலாநமக்,உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
கெட்டியானதும் இறக்கி ஆறியதும் எடுத்து வைக்கவும். இனிப்பு சட்னி ரெடி!

க்ரீன் சட்னி செய்முறை... கடலை,இஞ்சி,பச்சைமிளகாய்,,உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும்.
அத்துடன் கொத்துமல்லி, புதினா,எலுமிச்சை சாறு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். க்ரீன் சட்னி ரெடி!

பூண்டு சட்னி செய்முறை... பூண்டு தோலி நீக்கி மற்ற சாமான்களுடன் சேர்த்து மிக்ஸியில் நீர் சேர்க்காமல் கெட்டியாக அரைக்கவும். பூண்டு சட்னி ரெடி!

ஓமப்பொடி செய்முறை... எல்லாம் சேர்த்து தேவையான நீர் சேர்த்து கெட்டியாகப் பிசையவும்
வாணலியில் எண்ணெய் சுட வைத்து தேங்குழல் படியில் மெல்லிய ஓமப்பொடி தட்டைப் போட்டு ஓமப்பொடிகளாகப் பிழியவும். ஓமப்பொடி ரெடி!

பரிமாறும் முறை.. ரகடா, பட்டீஸ் இரண்டும் சூடாக இருந்தால் ருசி அருமையாக இருக்கும்.

ஒரு தட்டில் இரண்டு பட்டீசை வைத்து அது முழுகும் அளவு ரகடா சேர்க்கவும்.

மேலே எழுதியுள்ள முறைப்படி சட்னிகளைத் தயாரித்து உங்கள் சுவைக்கேற்றபடி க்ரீன் சட்னி, இனிப்பு சட்னி, பூண்டு சட்னி சேர்க்கவும்.

அதன்மேல் நறுக்கிய தக்காளி, வெங்காயம் சேர்க்கவும். மேலே கொத்துமல்லி, ஓமப்பொடி தூவி பரிமாறவும்.

எல்லாவற்றையும் கலந்து சாப்பிடும்போது கிடைக்கும் ருசி மிக அருமையாக இருக்கும்.


Saturday 8 February 2020

கோல்கப்பா


தேவை
உருளைக்கிழங்கு...4
கருப்பு, வெள்ளை கொத்துக்கடலை(இரண்டுமாக)...1/2 கப்
உப்பு...தேவையான அளவு
சாட்மசாலா...1/4 டீஸ்பூன்
காஷ்மிரி மிளகாய்ப்பொடி...1/2 டீஸ்பூன்

இம்லி கி சட்னி or ஸ்வீட் சட்னி செய்ய...
சுக்குப்பொடி...1/4 டீஸ்பூன்
காரப்பொடி...1/2 டீஸ்பூன்
தனியாபொடி...1/2டீஸ்பூன்
வறுத்து பொடித்த சீரகப்பொடி...1/2டீஸ்பூன்
வெல்லம்...1/2 கப்
கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம்...10
புளி...1/2 கப்(கொட்டை நார் நீக்கவும்.)
உப்பு...தேவையான அளவு

ஜல்ஜீரா செய்ய...
காலாநமக்...1/4 டீஸ்பூன்
சாட்மசாலா...1டீஸ்பூன்
பெருங்காயப்பொடி...2சிட்டிகை
அம்சூர் பொடி...3/4டீஸ்பூன்
ஏலக்காய் பொடி...1/4 டீஸ்பூன்
மிளகு...1/2 டீஸ்பூன்
சோம்பு...1டீஸ்பூன்
சீரகம்...1டீஸ்பூன்
புதினா...1/2 கப்
புளி...பெரிய நெல்லிக்காய் அளவு
உப்பு...தேவையான அளவு

பூரி செய்ய......
பொடிரவை...1கப்
மைதா...4டீஸ்பூன்
வேகவிட எண்ணெய்...1டீஸ்பூன்
உப்பு...1/4 டீஸ்பூன்
பேகிங் பவுடர்...1/4டீஸ்பூன்

வழிமுறைகள்
பூரி செய்முறை... ரவா, மைதா,பேகிங் பவுடர், உப்பு,எண்ணெய் சேர்த்து பிசறவும்.
பின்பு 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளும்படி பிசையவும். அப்பொழுதுதான் மாவில் எலாஸ்டிக் தன்மை வரும்.
மேலும் தேவையான நீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து ஒரு ஈரத்துணியால் மூடி வைக்கவும்.
அரைமணி நேரம் கழித்து மீண்டும் அழுத்திப் பிசைந்து பூரிகளாக இடவும்.பூரிகள் மிக மெலிதாகவோ,அதிக கனமாகவோ இருக்கக் கூடாது.
அதில் ஒரு வட்டமான சிறு மூடியால் அழுத்தி சிறு பூரிகளை தனியே எடுத்து போட்டு வைக்கவும்.

எண்ணெய் காய்ந்ததும் அதில் 2,3 பூரிகளாக போடவும்.சிறு ஸ்பூனால் லேசாக அழுத்தினால் அவை நன்கு உப்பிக் கொள்ளும். கோல்கப்பா ரெடி!

ஜல்ஜீரா செய்முறை... புளியை சிறிதளவு வெந்நீரில் ஊறவைத்து ,அத்துடன் புதினா மற்றும் மேலே கூறப்பட்டுள்ள எல்லா சாமானும் சேர்த்து நல்ல நைஸாக அரைக்கவும்.
அத்துடன் 1கப் நீர் சேர்க்கவும். கொத்துமல்லி பொடியாக நறுக்கி சேர்க்கவும்.இதுவே ஜல்ஜீரா.

இம்லி கி சட்னி or ஸ்வீட் சட்னி செய்முறை... அரை கப் நீரில் புளி, பேரீச்சை இரண்டும் சேர்த்து 10நிமிடம் கொதிக்க விடவும்.
அதில் வெல்லம் சேர்க்கவும். எல்லாம் கொதித்து கெட்டியானதும் அதில் எல்லா பொடிகளும் போட்டு தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
ஆறியதும் மிக்ஸியில் நைஸாக அரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். இதுவே இனிப்பு சட்னி.

கருப்பு,வெள்ளை கொத்துக்கடலைகளை முதல்நாள் இரவு ஊறவைக்கவும்.
மறுநாள் குக்கரில்5,6 சத்தம் வரும்வரை நன்கு வேகவிடவும்.
உருளைக்கிழங்கை வேகவிட்டு நன்கு மசித்து, வெந்த கொத்துக் கடலையுடன் சேர்த்து, அதில் காஷ்மிரி மிளகாய்ப்பொடி, சாட் மசாலா,உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

கோல்கப்பாவின் மேல் விரலால் துளை செய்து அதில் உருளைக்கிழங்கு சனாமிக்ஸ், மேலே இனிப்பு சட்னி சேர்க்கவும்.
அதன்மேல் ஜல்ஜீரா தேவையான அளவு சேர்த்து சாப்பிடவும். கோல்கப்பா ருசி மிக அருமையாக இருக்கும்!

டில்லியில் கோல்கப்பா எனக் கூறப்படும் சுவையான இந்த தெருக்கடை உணவில் மேலே பொடியாக நறுக்கிய வெங்காயம், ஸேவ் எனப்படும் ஓமப்பொடி தூவினால் மும்பையின் பானிபூரி!

வங்காளத்தில் புச்கா, பீகார்,ஒரிஸ்ஸாவில் கொத்துக்கடலைக்கு பதிலாக காய்ந்த பட்டாணி வேகவைத்து சேர்த்து குப்சுப் என்ற பெயரிலும் அழைக்கப்படும் இந்த கோல்கப்பா வடமாநிலங்களில் பெரும்பாலான மக்களின் மிக மிக விருப்பமான தெருக்கடை உணவு!

Friday 7 February 2020

Mojito mocktail

  1. Muddle the sugar with leaves from the mint using a pestle and mortar (or use a small bowl and the end of a rolling pin).
  2. Put a handful of crushed ice into 2 tall glasses. Divide the lime juice between the glasses with the mint mix. Add a straw and top up with soda water.

Pomegranate Mojito Mocktail

  • 3 tbsp pomegranate  seeds
  • big bunch mint
  • limes , quartered, plus slices to garnish
  • 1l pomegranate juice
  • 500ml lemonade
  1. A day ahead, divide the pomegranate seeds between the holes in an ice cube tray, top up with water and freeze.
  2. Reserve half the mint for serving, and tear the rest into a large jug with the lime quarters. Using a rolling pin, bash the mint and lime to release the flavours. Add the pomegranate juice and lemonade. Put ice cubes in each glass, then strain over the pomegranate mix through a small sieve. Garnish with lime slices and more mint.