Saturday 8 February 2020

கோல்கப்பா


தேவை
உருளைக்கிழங்கு...4
கருப்பு, வெள்ளை கொத்துக்கடலை(இரண்டுமாக)...1/2 கப்
உப்பு...தேவையான அளவு
சாட்மசாலா...1/4 டீஸ்பூன்
காஷ்மிரி மிளகாய்ப்பொடி...1/2 டீஸ்பூன்

இம்லி கி சட்னி or ஸ்வீட் சட்னி செய்ய...
சுக்குப்பொடி...1/4 டீஸ்பூன்
காரப்பொடி...1/2 டீஸ்பூன்
தனியாபொடி...1/2டீஸ்பூன்
வறுத்து பொடித்த சீரகப்பொடி...1/2டீஸ்பூன்
வெல்லம்...1/2 கப்
கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம்...10
புளி...1/2 கப்(கொட்டை நார் நீக்கவும்.)
உப்பு...தேவையான அளவு

ஜல்ஜீரா செய்ய...
காலாநமக்...1/4 டீஸ்பூன்
சாட்மசாலா...1டீஸ்பூன்
பெருங்காயப்பொடி...2சிட்டிகை
அம்சூர் பொடி...3/4டீஸ்பூன்
ஏலக்காய் பொடி...1/4 டீஸ்பூன்
மிளகு...1/2 டீஸ்பூன்
சோம்பு...1டீஸ்பூன்
சீரகம்...1டீஸ்பூன்
புதினா...1/2 கப்
புளி...பெரிய நெல்லிக்காய் அளவு
உப்பு...தேவையான அளவு

பூரி செய்ய......
பொடிரவை...1கப்
மைதா...4டீஸ்பூன்
வேகவிட எண்ணெய்...1டீஸ்பூன்
உப்பு...1/4 டீஸ்பூன்
பேகிங் பவுடர்...1/4டீஸ்பூன்

வழிமுறைகள்
பூரி செய்முறை... ரவா, மைதா,பேகிங் பவுடர், உப்பு,எண்ணெய் சேர்த்து பிசறவும்.
பின்பு 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளும்படி பிசையவும். அப்பொழுதுதான் மாவில் எலாஸ்டிக் தன்மை வரும்.
மேலும் தேவையான நீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து ஒரு ஈரத்துணியால் மூடி வைக்கவும்.
அரைமணி நேரம் கழித்து மீண்டும் அழுத்திப் பிசைந்து பூரிகளாக இடவும்.பூரிகள் மிக மெலிதாகவோ,அதிக கனமாகவோ இருக்கக் கூடாது.
அதில் ஒரு வட்டமான சிறு மூடியால் அழுத்தி சிறு பூரிகளை தனியே எடுத்து போட்டு வைக்கவும்.

எண்ணெய் காய்ந்ததும் அதில் 2,3 பூரிகளாக போடவும்.சிறு ஸ்பூனால் லேசாக அழுத்தினால் அவை நன்கு உப்பிக் கொள்ளும். கோல்கப்பா ரெடி!

ஜல்ஜீரா செய்முறை... புளியை சிறிதளவு வெந்நீரில் ஊறவைத்து ,அத்துடன் புதினா மற்றும் மேலே கூறப்பட்டுள்ள எல்லா சாமானும் சேர்த்து நல்ல நைஸாக அரைக்கவும்.
அத்துடன் 1கப் நீர் சேர்க்கவும். கொத்துமல்லி பொடியாக நறுக்கி சேர்க்கவும்.இதுவே ஜல்ஜீரா.

இம்லி கி சட்னி or ஸ்வீட் சட்னி செய்முறை... அரை கப் நீரில் புளி, பேரீச்சை இரண்டும் சேர்த்து 10நிமிடம் கொதிக்க விடவும்.
அதில் வெல்லம் சேர்க்கவும். எல்லாம் கொதித்து கெட்டியானதும் அதில் எல்லா பொடிகளும் போட்டு தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
ஆறியதும் மிக்ஸியில் நைஸாக அரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். இதுவே இனிப்பு சட்னி.

கருப்பு,வெள்ளை கொத்துக்கடலைகளை முதல்நாள் இரவு ஊறவைக்கவும்.
மறுநாள் குக்கரில்5,6 சத்தம் வரும்வரை நன்கு வேகவிடவும்.
உருளைக்கிழங்கை வேகவிட்டு நன்கு மசித்து, வெந்த கொத்துக் கடலையுடன் சேர்த்து, அதில் காஷ்மிரி மிளகாய்ப்பொடி, சாட் மசாலா,உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

கோல்கப்பாவின் மேல் விரலால் துளை செய்து அதில் உருளைக்கிழங்கு சனாமிக்ஸ், மேலே இனிப்பு சட்னி சேர்க்கவும்.
அதன்மேல் ஜல்ஜீரா தேவையான அளவு சேர்த்து சாப்பிடவும். கோல்கப்பா ருசி மிக அருமையாக இருக்கும்!

டில்லியில் கோல்கப்பா எனக் கூறப்படும் சுவையான இந்த தெருக்கடை உணவில் மேலே பொடியாக நறுக்கிய வெங்காயம், ஸேவ் எனப்படும் ஓமப்பொடி தூவினால் மும்பையின் பானிபூரி!

வங்காளத்தில் புச்கா, பீகார்,ஒரிஸ்ஸாவில் கொத்துக்கடலைக்கு பதிலாக காய்ந்த பட்டாணி வேகவைத்து சேர்த்து குப்சுப் என்ற பெயரிலும் அழைக்கப்படும் இந்த கோல்கப்பா வடமாநிலங்களில் பெரும்பாலான மக்களின் மிக மிக விருப்பமான தெருக்கடை உணவு!

No comments:

Post a Comment