திங்கள், 15 ஏப்ரல், 2019

இஞ்சி குழம்பு

வயிற்று கோளாறுகளுக்கு இந்த் இஞ்சி குழம்பை வாரம் ஒருமுறை செய்து சாப்பிடலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

துவரம் பருப்பு - 2 ஸ்பூன்
கடலை பருப்பு - 2 ஸ்பூன்
சாம்பார் பொடி - 2 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 3
புளி - சிறிதளவு
பூண்டு - 20 பல்
இஞ்சி - 25 கிராம்
வறுத்து பொடித்த வெந்தயம் - 1 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
பெருங்காயம் - சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
புளி - சிறிதளவு

செய்முறை :

* முதலில் இஞ்சி, பூண்டு, வெங்காயத்தை மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவும்.

* புளியை தேவையான தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து கொள்ளவும்.

* கடாயில் நல்லெண்ணெய் விட்டு, கடுகு, கடலை பருப்பு, துவரம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் அரைத்த விழுதை போட்டு வதக்கவும். நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

* அடுத்து அதில் மஞ்சள் தூள் சேர்க்கவும்.

* அடுத்து 1 டம்ளர் தண்ணீர், புளி கரைத்த தண்ணீர், சாம்பார் பொடி, பெருங்காய தூள், வறுத்த வெந்தய பொடி, உப்பு எல்லாம் சேர்க்கவும்.

* நன்கு கொதித்து கெட்டியாகி எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.

* நல்ல மணமுள்ள இஞ்சி குழம்பு தயார்.

* இந்த இஞ்சி குழம்பு வயிற்று உபாதைகளுக்கு மிகவும் நல்லது.

ரகடா பட்டீஸ்


ரகடாவிற்கு...
காய்ந்த பட்டாணி...1கப்
பெரியவெங்காயம்...1(பொடியாக நறுக்கவும்.)
தக்காளி...1(பொடியாக நறுக்கவும்)
பெருங்காயத்தூள்...1/4 டீஸ்பூன்
கடுகு...1டீஸ்பூன்
சீரகம்...1டீஸ்பூன்
இஞ்சி பச்சைமிளகாய் விழுது...2டீஸ்பூன்
மஞ்சள்பொடி...1டீஸ்பூன்
தனியாபொடி...1டீஸ்பூன்
காரப்பொடி ...3/4 டீஸ்பூன்
கரம்மசாலா...1/2 டீஸ்பூன்
வெல்லம்...சிறுதுண்டு
கறிவேப்பிலை...ஒருகொத்து
எண்ணை...4டீஸ்பூன்
எலுமிச்சைசாறு...2டீஸ்பூன்
உப்பு...தேவையான அளவு

பட்டாணியை இரவு தண்ணீரில் ஊற வைக்கவும்.

மறுநாள் குக்கரில் 5,6 சத்தம் வரும்வரை வேகவிடவும்.

வெளியில் எடுத்து மசித்து வைத்துக் கொள்ளவும்.

எண்ணெயைக் காயவைத்து அதில் பெருங்காயம், கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும்.

அதில் இஞ்சி பச்சைமிளகாய் விழுது வதக்கி, அதிலேயே நறுக்கிய தக்காளி, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

நன்கு வதக்கியதும் அதில் மஞ்சள்பொடி, தனியாபொடி, காரப்பொடி, கரம்மசாலா, சேர்த்து மேலும் சற்று வதக்கவும்.

அதில் வேகவிட்ட பட்டாணி,உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

வெல்லம் சேர்க்கவும்.
மேலே கொத்துமல்லி தூவி அலங்கரிக்கவும்.

ரகடா ரெடி!

பட்டீஸ் செய்ய..
--------------------------
உருளைக் கிழங்கு...4 (வேகவைத்து உரித்து நன்கு மசிக்கவும்)
கார்ன் ஃப்ளவர்...3டேபிள்ஸ்பூன்
காரப்பொடி...1டீஸ்பூன்
எண்ணை...4டீஸ்பூன்
உப்பு...தேவையான அளவு

உருளைக் கிழங்கை நன்கு வேகவிட்டு தோலி நீக்கி உரித்து நன்கு மசிக்கவும்.

அத்துடன் கார்ன் ஃப்ளவர், உப்பு, காரப்பொடி எண்ணை சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து மூடி வைக்கவும்.

1/2 மணி கழித்து நன்கு பிசைந்து எலுமிச்சை அளவு மாவு எடுத்து உள்ளங்கையில் வட்டமாக கனமாகத் தட்டவும்.

தோசைக்கல்லை காயவைத்து அதில் பட்டீசைப் போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு இரு பக்கமும் சிவக்க வேகவிடவும்.
பட்டீஸ் ரெடி!

இனிப்பு சட்னி
-----------------------
விதையில்லாத பேரீச்சை...10
புளி...எலுமிச்சை அளவு
வெல்லம்...1/4 கப்
காரப்பொடி...1/2டீஸ்பூன்
சீரகப்பொடி...1/2 டீஸ்பூன்
காலாநமக்(கருப்பு உப்பு)....1/4 டீஸ்பூன்
உப்பு...1டீஸ்பூன்
தண்ணீர்...1 1/2 கப்

புளியை ஒன்றரை கப் தண்ணீரில் ஊறவைத்து கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.

பேரீச்சையை 2 நிமிடம் நீரில் கொதிக்கவிட்டு அரைக்கவும்.

புளித்தண்ணீரை  கொதிக்கவிட்டு புளி வாசனை போய் சற்று கெட்டியானதும் அதில் அரைத்த பேரீச்சை விழுது, வெல்லம், சீரகப்பொடி, காரப்பொடி, காலாநமக்,உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

கெட்டியானதும் இறக்கி ஆறியதும் எடுத்து வைக்கவும்.
இனிப்பு சட்னி ரெடி!

க்ரீன் சட்னி
---------------------
கொத்துமல்லி...1/2 கப்
புதினா...1/4 கப்
நிலக்கடலை 2 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய்...2
இஞ்சி... சிறு துண்டு
உப்பு...1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு...3டீஸ்பூன்

கடலை,இஞ்சி,பச்சைமிளகாய்,,உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும்.

அத்துடன் கொத்துமல்லி, புதினா,எலுமிச்சை சாறு சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
க்ரீன் சட்னி ரெடி!

பூண்டு சட்னி
----------------------
பூண்டுபற்கள்...15
காரப்பொடி...2டீஸ்பூன்
சீரகம்...1டீஸ்பூன்
தனியா பொடி...1/2 டீஸ்பூன்
உப்பு....தேவையான அளவு

பூண்டு தோலி நீக்கி மற்ற சாமான்களுடன் சேர்த்து மிக்ஸியில் நீர் சேர்க்காமல் கெட்டியாக அரைக்கவும்.
பூண்டு சட்னி ரெடி!

ஓமப்பொடி
------------------
கடலை மாவு...1 1/2கப்
மிளகுபொடி...1/4 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி...சிறிது
காரப்பொடி...1/2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி...1/4 டீஸ்பூன்
நெய்...3டீஸ்பூன்
உப்பு...தேவையான அளவு

எல்லாம் சேர்த்து தேவையான நீர் சேர்த்து கெட்டியாகப் பிசையவும்
வாணலியில் எண்ணெய் சுட வைத்து தேங்குழல் படியில் மெல்லிய ஓமப்பொடி தட்டைப் போட்டு ஓமப்பொடிகளாகப் பிழியவும்.
ஓமப்பொடி ரெடி!

பரிமாற தேவை..
பொடியாக நறுக்கிய தக்காளி
பொடியாக நறுக்கிய வெங்காயம்
சேவ் எனப்படும் மெலிதான ஓமப்பொடி (கடைகளில் கிடைக்கும்.)
இனிப்பு சட்னி
க்ரீன் சட்னி
பூண்டு சட்னி
பொடியாக நறுக்கிய கொத்துமல்லி

பரிமாறும் முறை..
ரகடா, பட்டீஸ் இரண்டும் சூடாக இருந்தால் ருசி அருமையாக இருக்கும்.
ஒரு தட்டில் இரண்டு பட்டீசை வைத்து அது முழுகும் அளவு ரகடா சேர்க்கவும்.

மேலே எழுதியுள்ள முறைப்படி சட்னிகளைத் தயாரித்து  உங்கள் சுவைக்கேற்றபடி க்ரீன் சட்னி, இனிப்பு சட்னி, பூண்டு சட்னி சேர்க்கவும்.

அதன்மேல் நறுக்கிய தக்காளி, வெங்காயம் சேர்க்கவும்.
மேலே கொத்துமல்லி, ஓமப்பொடி தூவி பரிமாறவும்.

எல்லாவற்றையும் கலந்து சாப்பிடும்போது கிடைக்கும் ருசி மிக அருமையாக இருக்கும்.

பார்க்கும்போதே சாப்பிடத் தூண்டும் ரகடா பட்டீஸ் மும்பையின் பிரபலமான தெருக்கடை உணவு!