சனி, 14 மார்ச், 2020

க்ரிஸ்பி சிலிண்டர்


வரகரிசி..1கப்
சாமை அரிசி..1கப்
பெரிய வெங்காயம்..1
புள்க்காத கெட்டித் தயிர்..1/2 கப்
காரட் துருவல்..1/2 கப்
பொடி ரவை..3ஸ்பூன்
சிறு துண்டுகளாக்கிய மிந்திரி..2டீஸ்பூன்
பெருங்காயப் பொடி..சிறிது
காரப்பொடி..1 டீஸ்பூன்
கரம் மசாலா..1ஸ்பூன்
விழுது நெய்..2 டீஸ்பூன்
பச்சை மிளகாய்..2
இஞ்சி..சிறுதுண்டு
உப்பு, எண்ணெய்..தேவையான அளவு

செய்முறை
வரகரிசி,சாமையை நன்கு களைந்து தயிரில் 1 மணி நேரம் ஊறவைக்கவும். வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாயை பொடியாக நறுக்கவும். ஊறிய அரிசியுடன் ரவை, மிந்திரி, காரப்பொடி, கரம் மசாலா, நெய்,உப்பு சேர்த்து கெட்டியாகப் பிசைந்து நீள் வடிவ சிலிண்டர் போல் உருட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சாஸுடன் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். சத்தான சிறுதானிய ரெசிபி.

மிக்ஸட் நட்ஸ் ரௌண்ட்ஸ்

தேவை
துண்டுகளாக்கிய மிந்திரி..50 கிராம்
துண்டுகளாக்கிய பாதாம்..25 கிராம்
துண்டாக்கிய பிஸ்தா..15 கிராம்
விதை நீக்கிய பொடியாக நறுக்கிய பேரீச்சம்பழம்..50 கிராம்
வறுத்து தோல் உரித்து இரண்டாக்கிய வேர்க்கடலை..1/2 கப்
பொட்டுக்கடலை..1/2 கப்
கொப்பரைத் தேங்காய்த் துருவல்..1/4 கப்
லிக்விட் குளுகோஸ்..50 கிராம்
வெல்லம்..250 கிராம்
ஏலப்பொடி..1டீஸ்பூன்
சுக்குப் பொடி..1 டீஸ்பூன்
நெய்..7-8 டீஸ்பூன்

செய்முறை
மிந்திரி, பாதாம், பிஸ்தா, வேர்க்கடலை, பொட்டுக்கடலையை நெய்யில் தனித்தனியே வறுக்கவும்.
வெல்லத்தை கம்பிப் பதத்திற்கு முன்பான பாகு காய்ச்சி இறக்கவும்.அதில் வறுத்த நட்ஸ், கடலை, பொட்டுக்கடலை சேர்க்கவும். துண்டாக்கிய பேரீச்சை, கொப்பரைத் துருவல், லிக்விட் குளுகோஸ், ஏலப்பொடி  சேர்த்து நன்கு கிளறவும். சிறுசிறு உருண்டைகளாக்கவும். வித்யாசமான ருசியில் சத்தான இந்த உருண்டைகள் குழந்தைகளுக்கு பிடித்த பிக்னிக் ரௌண்ட்ஸ்!

ஹெல்தி டிட்பிட்ஸ்



தேவை
கடலை மாவு - 50 கிராம்
அரிசி மாவு - 50கிராம்
பொட்டுக் கடலை மாவு - 50கிராம்
பெருங்காயப்பொடி - ஒரு சிட்டிகை
சமையல் சோடா - 1சிட்டிகை
இஞ்சி -  1 சிறுதுண்டு
பச்சை மிளகாய் - 2 அல்லது 3
காரப்பொடி -1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
பாதாம் பருப்பு - 20 கிராம்
பிஸ்தா பருப்பு - 25கிராம்
முந்திரி பருப்பு - 25கிராம்
நெய் - 4 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு தேவையான அளவு
செய்முறை
பொட்டுக்கடலையை லேசாக சூடுவர வறுத்து பொடி செய்யவும்.
முந்திரிப்  பருப்பை சிறிய துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும்.
பாதாம் பிஸ்தாவை வெந்நீரில் ஊறவைத்து சிறு துண்டுகளாக்கவும்.
பச்சை மிளகாய், இஞ்சி, இவற்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் பொட்டுக்கடலை மாவு, கடலை மாவு, அரிசி மாவு, சமையல் சோடா, காரப்பொடி, கரம் மசாலா, உடைத்த முந்திரி, பாதாம், பிஸ்தாபருப்பு, வெங்காயம்,  இவற்றுடன் மிக்ஸியில் அரைத்த விழுது, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
நெய்யை சூடாக்கி கலவையில் கொட்டவும்.
சிறிது தண்ணீர் சேர்த்து கலவையை கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் பொறிப்பதற்கு தேவையான எண்ணெயை சூடாக்கவும்.
மாவு கலவை சிறிது எடுத்துக் கொண்டு பிசிறினாற் போல் காய்ந்த எண்ணெயில் போட்டு பொறிக்கவும். சிவந்தவுடன் எடுத்து வடிய விடவும்.
இனிமையான  ஹெல்தி டிட்பிட்ஸ் பிக்னிக் சமயங்களுக்கு ஏற்ற ரெசிபி!  குழந்தைகளுக்கு சத்தானது.

புதன், 4 மார்ச், 2020

இளநீர் ரசம்


ஒரு கல்யாண விருந்தில் இந்த ரசம் பரிமாற பட்டது. நான் அந்த சமையல் நிபுனரிடம் பேசி இந்த நுணுக்கத்தை பெற்றேன்.

தேவையான பொருட்கள் :

இளநீர் – 2
துவரம்பருப்பு வேகவைத்தது – 1 டேபிஸ் ஸ்பூன்
தக்காளி – 1
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கடுகு – ½ டீஸ்பூன்
வெந்தயம் – ½ டீஸ்பூன்
மிளகாய் – 1
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை.
உப்பு – 1 டீஸ்பூன்
புளி – 2 சுளை.
எண்ணெய்/நெய் – 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – 1 இணுக்கு.
கொத்தமல்லி தழை - சிறிதளவு

செய்முறை :

1.இளநீரை தனியாக எடுத்து வைக்கவும். அதில் உள்ள வழுக்கையையும் தனியாக வைக்கவும்.

2.கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

3.உப்புப் புளியை ½ கப் தண்ணீரில் ஊறவைத்து கரைத்து அதில் தக்காளி, இளநீர் வழுக்கையையும் போட்டுப் பிசைந்து வைக்கவும்.

4.அதில் மிளகாய், மிளகு, சீரகத்தைப் பொடித்துப் போடவும்.

5.வேகவைத்த துவரம் பருப்பைக் கரைத்து ஊற்றவும்.

6. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம் தாளித்து கறிவேப்பிலை பெருங்காயப் பொடி போட்டுக் கரைத்து வைத்துள்ள புளிக்கலவையை கலவையை ஊற்றவும்.

7.அதுசூடேறி வரும்போது இளநீரை ஊற்றிக் கொதி வரும் முன் கொத்தமல்லி தூவி இறக்கவும்.