வெள்ளி, 3 மே, 2019

நாரத்தங்காய் தொக்கு


தேவை
நாரத்தங்காய்...4
இஞ்சி...சிறுதுண்டு
காரப்பொடி...3 டேபிள்ஸ்பூன்
பெருங்காயப்பொடி...1/2 டீஸ்பூன்
வெந்தய மஞ்சள்பொடி...1டீஸ்பூன்
நல்லெண்ணெய்...1/4 கப்
கடுகு...1டீஸ்பூன்
உப்பு...தேவையான அளவு

செய்முறை
வெந்தய மஞ்சள்பொடி...6டீஸ்பூன் வெந்தயத்தை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து, அத்துடன் 3டீஸ்பூன் மஞ்சள்பொடி சேர்த்துப் பொடி செய்யவும். இதை செய்து வைத்துக் கொண்டால் எல்லா ஊறுகாயிலும் சேர்க்கலாம். ஊறுகாய்க்கு நல்ல வாசனை தரும்.

நாரத்தங்காயை கொட்டை நீக்கி சிறு துண்டுகளாக்கவும்.

குக்கரில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் நாரத்தை துண்டுகள் சேர்த்து அதில் 1/4 ஸ்பூன் மஞ்சள்பொடி சேர்த்து வதக்கவும்.

குக்கரை மூடி ஒரு சத்தம் வந்ததும் இறக்கி, ஆறியதும் திறந்து இஞ்சியுடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு பெருங்காயப்பொடி சேர்த்து பொரிந்ததும், கடுகு சேர்த்து வெடிக்க விடவும்.

அதில் அரைத்த விழுது சேர்த்து, தேவையான உப்பு, காரப்பொடி சேர்த்து நன்கு கிளறவும்.

எண்ணை பிரியும்போது வெந்தய மஞ்சள்பொடி சேர்த்து நன்கு கலந்து இறக்கி ஜாடியில் எடுத்து வைக்கவும்.

சுவையான இந்த ஊறுகாய் தயிர்சாதம், சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளலாம்.