Saturday 16 November 2019

பிரண்டை குழம்பு


தேவை..
பிரண்டை ..1சிறு கட்டு
மிளகு..3 டீஸ்பூன்
சீரகம்..1டீஸ்பூன்
தனியா..1டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு..1டீஸ்பூன்
கறிவேப்பிலை..10 கொத்துகள்
புளி..சிறு உருண்டை
உப்பு..தேவையான அளவு
பெருங்காயம்..சிறு துண்டு
கடுகு..1டீஸ்பூன்
நல்லெண்ணெய்..6-8 டீஸ்பூன்

செய்முறை..
பிரண்டை அரிக்கும் தன்மை உடையது. அதன் மேல் தோலியை நீக்கி சிறு துண்டுகளாக்கவும்.

ஒரு வாணலியில் 2ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் பெருங்காயம் பொரித்து, அத்துடன் உளுத்தம்பருப்பு, சீரகம்,தனியா போட்டு சிவந்ததும் எடுத்துவிட்டு அதிலேயே மிளகு வறுக்கவும். கடைசியில் பிரண்டை போட்டு நன்கு வதக்கி கறிவேப்பிலை சேர்த்து சற்று வதக்கி எடுக்கவும்.

வறுத்த சாமான்களுடன் புளி, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.

வாணலியில் மீதமுள்ள எண்ணெய் விட்டு கடுகு தாளித்து அதில் அரைத்த கலவையை எண்ணை பிரிய வதக்கவும். பிரண்டை குழம்பு ரெடி. சாதத்தில் பிசைந்தும் தயிர் சாதத்துக்கு தொட்டுக் கொண்டும் சாப்பிடலாம்.

பிரண்டை மருத்துவ குணம் நிறைந்தது. வாய்வு பிடிப்பு, சுலுக்கு, வயிற்றுக் கோளாறுகளைப் போக்கும் தன்மை உடையது. அஜீரணம், முழங்கால் இடுப்பு வலிகளைப் போக்கும்.அடிக்கடி சாப்பிட உடல் அழகு பெறும்.