ஞாயிறு, 17 மே, 2015

பரங்கிக்காய் லட்டு கறி (கல்யாண கறி)


தேவை 

பரங்கிக்காய்--- ½ கிலோ 
உப்பு--- டீஸ்பூன் 
வெல்லம்---25 கிராம்.
துருவிய தேங்காய்---1 கப் 

தாளிக்க

கடுகு----1 டீஸ்பூன்
உடைத்த உளுத்தம்பருப்பு---2 டீஸ்பூன்
எண்ணெய்  ---1 டீஸ்பூன்
நெய்----1 டீஸ்பூன்

செய்முறை
பரங்கிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, முழுகும் அளவு தண்ணீரில் குழையாமல் வேகவிட்டு, வடிகட்டவும்.

ஒரு வாணலியில் நெய்யும், எண்ணெயும் சேர்த்து  சுட வைத்து, கடுகு போட்டு வெடித்ததும், உளுத்தம்பருப்பு சேர்க்கவும். பருப்பு சிவந்ததும், அதில் வெந்த பரங்கிக்காய் சேர்த்து, அத்துடன் வெல்லம்  சேர்த்துக் கிளறவும்.

வெல்லம் கரைந்து சேர்ந்து கெட்டியானதும், தேங்காய் சேர்த்துக் கிளறி இறக்கவும்.


பரங்கிக்காயில் இனிப்பு இருக்குமாதலால் அதிக வெல்லம் சேர்க்கக் கூடாது. 







அந்தக்கால கறிவகை இது. வத்தக் குழம்பு, காரக் குழம்புடன் சாப்பிட இது மிக ருசியாக இருக்கும்.

2 கருத்துகள்:

  1. என் மாமியாருக்குப் பிடித்தது இது. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பின்னூட்டம் பார்த்து ரொம்ப சந்தோஷம் கீதா...எப்படி இருக்கேள்?

      நீக்கு