செவ்வாய், 5 மே, 2015

டபுள் டெக்கர் கேக்


தேவை

மைதா—2  கப்
சர்க்கரை---  3 கப்
நெய்--   கப்
ஏலப்பொடி--- 1  தேக்கரண்டி
ஆரஞ்சுபச்சை  நிற  ஃபுட்  கலர்

செய்முறை

வாணலியில்  நெய்யை  விட்டு  உருக வைக்கவும். அதில்  மைதா  மாவைப்  போட்டுகேஸை  சிம்மில்  வைத்து  சிவக்காமல்  வறுக்கவும். அதனை  இரண்டு  பாகமாக  பிரித்து  வைத்துக்  கொள்ளவும்.

  


கப்  சர்க்கரையை  ½ கப்  தண்ணீர்  சேர்த்து  கொதிக்க  விடவும். ½ கரண்டி  பாலை  விட்டு  அழுக்கை  நீக்கவும்.  கம்பிப்  பதமாக  வந்ததும்  வாணலியைக்  கீழே  இறக்கவும்.



அதில்  நெய்யில்  வறுத்த  மைதாஏலப்பொடிஆரஞ்சு  வண்ணப்  பொடி சேர்த்து  கைவிடாமல்  வேகமாகக்  கிளறவும். மீண்டும்  அடுப்பில்  வைக்கக்  கூடாது.  அந்த  சூட்டிலேயே  கெட்டியாகிவிடும்.

 கலவை  சேர்ந்து  ஒட்டாமல்  சுருண்டு  வரும்போது  நெய்  தடவிய  தட்டில்  கொட்டி  சமமாக்கவும்.


வாணலியை  அலம்பி  விட்டு  மீதியுள்ள  1½  கப்  சர்க்கரை +  ½ கப்  நீர்  சேர்த்து  முதலில்  கூறியபடியே  பாகு  வைக்கவும்.


ஆரஞ்சுக்கு  பதிலாக  பச்சை  நிறப்பொடியை  சேர்த்து  மேலே  கூறியபடியே  கேக்கைக்  கிளறவும். 


அதனை  ஆரஞ்சு  நிற  கேக்கின்  மேலே  கொட்டி   சமமாக்கவும்.


இளஞ்சூடாக  இருக்கும்  போதே  விரும்பிய  வடிவத்தில் துண்டுகளாக்கவும்.
 Displaying d.d.cak7.JPG
மேலே  பாதாம்  பருப்புகளை  (விருப்பப்படி  மிந்திரிபிஸ்தா)   ஒட்டி  அழகு  படுத்தவும்.

Displaying d.d cake8.JPG 
இதனை சிவப்பு, பச்சை அல்லது மஞ்சள், பச்சை அல்லது ஆரஞ்சு, மஞ்சள் போன்று வேறுபட்ட ஃ புட் கலர்களைச் சேர்த்தும் செய்யலாம்.



எளிமையானஅழகானசுவையான, புதுமையான இந்த  டபுள் டெக்கர் கேக் சுவையிலும் இரட்டிப்பாக இருக்கும்!
Displaying kaathalarthina cake.jpg

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக