தேவை:
தேங்காய்- 1 கப்
சர்க்கரை- 1½ கப்
நெய்- ¾ கப்
ஏலக்காய்- 6
மிந்திரி பருப்பு- 15
செய்முறை
தேங்காயை நல்ல வெள்ளையாகத் துருவிக் கொள்ளவும்.4 தேக்கரண்டி நெய்யில் மிந்திரிப் பருப்பை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
ஏலக்காயைப் பொடி செய்து கொள்ளவும்.
வாணலியில் 11/2 கப் சர்க்கரை போட்டு 1/2
கப்
தண்ணீர் சேர்த்து பாகாக்கவும்.
கையால் தொட்டுப் பார்த்து ஒரு கம்பிப் பதம்
வந்ததும், துருவிய தேங்காயை அதில் சேர்த்து கிளறவும்.
தேங்காயும், பாகும் சேர்ந்து கெட்டியானதும் சிறிது சிறிதாக நெய்யைச் சேர்த்துக் கிளறவும்.
வறுத்த மிந்திரி பருப்பு, பொடித்த ஏலப்பொடியை சேர்க்கவும். பாத்திரத்தில்
ஒட்டாமல் பர்ஃபி பதம் வந்ததும் தட்டில் கொட்டி துண்டுகளாக்கவும்.
கண்ணைக் கவரும் வெண்ணிற தேங்காய் பர்ஃபி
நீங்கள் சாப்பிடவும், பரிமாறவும் ரெடி!!
தேங்காயை அரைச்சும் செய்யலாம். கொஞ்சம் சேர்ந்தாப்போல் வரும். :)
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றி.அரைத்து செய்தால் ரொம்ப சேர்ந்தார் போலாகிவிடும். என் வீட்டில் இப்படித்தான் எல்லாருக்கும் பிடிக்கும். அதனால் நான் அரைத்து செய்வதில்லை.
நீக்கு