தேவையானவை:
வேகவைத்து மசித்த உருளைக் கிழங்கு - 1 கப்
பச்சைமிளகாய் - 4
மஞ்சள்தூள், கரம்மசாலா - தலா அரை டீஸ்பூன்
சீஸ் - சில துண்டுகள்
பொடியாக சீவிய முந்திரி, பிஸ்தா (கலந்தது) -
இரண்டு டேபிள் ஸ்பூன்
எண்ணெய்,உப்பு - தேவையான அளவு.
செய்முறை
:
மசித்த உருளைக் கிழங்குடன் பொடியாக நறுக்கிய
பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து கட்டியில்லாமல்
பிசையவும்
அதிலிருந்து கொஞ்சம் எடுத்து சிறு உருண்டையாக
உருட்டி, நடிவில் குழியாக்கி அதில் சிறிய சீஸ் துண்டு வைத்து, அதன் மேல் பொடியாக
சீவிய முந்திரி, பிஸ்தா தூவி நன்கு மூடி விடவும். இதேபோல் ஒவ்வொரு உருண்டையும்
தயார் செய்யவும். கடாயில் எண்ணெயைக் காய வைத்து உருட்டி வைத்திருக்கும் உருண்டைகளைப்
போட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுத்து சாஸ் அல்லது சட்னியுடன் பரிமாறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக