தேவை
அரிசிமாவு - இரண்டு கப்
அரிசிமாவு - இரண்டு கப்
நன்கு
புளித்த மோர் - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க
பெருங்காயம் - சிறிது
கடுகு - 2
தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
பச்சை
மிளகாய்
- 3
மோர்
மிளகாய்
- 6
நல்லெண்ணெய் - கால் கப்
செய்முறை
அரிசிமாவுடன் மோர்,
தேவையான உப்பு,
தண்ணீர் சேர்த்து
குழம்பு
பதத்தில்
கரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றவும். காய்ந்ததும் அதில் பெருங்காயம் போட்டு பொரிந்ததும், மோர்மிளகாய் போட்டு நன்கு வறுக்கவும். முதலில் மோர்மிளகாயை சேர்த்தால்தான் நன்கு வறுபடும்.
பின் கடுகு சேர்த்து வெடித்ததும் உளுத்தம்பருப்பு சேர்க்கவும். பருப்பு சிவந்தபின், பச்சைமிளகாயை கிள்ளிப் போட்டு, அதில் கரைத்த மாவுக்கலவையை சேர்த்து நன்கு வெந்து கெட்டியாகும்வரைக் கிளறவும். அடிபிடிக்காமல் பார்த்துக் கொள்ளவும்.
மாவைத் தொட்டுப் பார்த்தால் கையில் ஒட்டாமல் இருக்க வேண்டும். ஒரு தட்டில் மோர்க்கூழைக் கொட்டி சிறு துண்டுகளாக்கி சாப்பிடவும்.
தொட்டுக்கொள்ள தனியாக
எதுவும் தேவை
இல்லை. அதிலுள்ள
மோர்மிளகாயே போதும்.
புளிப்பு, உப்பு,
காரம் எல்லாம்
சேர்ந்து நாவைச்
சப்புக்கொட்டி சாப்பிட
வைக்கும் இந்த
மோர்க்கூழ்!
இதை செய்வது மிக சுலபம். மோர் அதிகமாகி புளித்துவிட்டால் அது வீணாகாமல் இந்த ரெசிபியை செய்யலாம்.
அடிக்கடி செய்யும் இட்லி, தோசை, உப்புமா அலுக்கும்போது இது வித்யாசமான சுவையுடன் ருசியாக இருக்கும்.
இது இக்காலத்தில் மறந்துவிட்ட ஒரு பாரம்பரிய
டிஃபன். அந்தக்கால மனிதர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு சிற்றுண்டி இது.
இதில் நல்லெண்ணெய்
சேர்த்திருப்பதால் கொழுப்பு
குறைவு.
பாரம்பரிய இந்தச் சிற்றுண்டியை இன்றைய இளசுகள், குழந்தைகளை சாப்பிட வைக்க நான் செய்யும் மாடர்ன் ரெசிபி இது!
காலி ஃப்ளவர், கேரட், முட்டை கோஸ், பெரிய
வெங்காயம் இவற்றை மிகப் பொடியாக நறுக்கி, இரண்டு ஸ்பூன் எண்ணையில் வதக்கி, கரைத்த
மாவுடன் கலந்து கொள்ளவும். மேலே கூறியபடி மோர்க்கூழ் செய்யவும். இக்காலத்துக்கு
ஏற்ற சத்தான ‘மோர் ஹல்வா’ ரெடி!
வித்யாசமான இந்தச் சுவையான
ஹல்வாவை நிச்சயம்
குழந்தைகள்
விரும்புவார்கள்! ஒவ்வொரு
ஹல்வாவின் மீதும்
ஒரு பாதாம் அல்லது
முந்திரியை வைத்து
அழுத்திக் கொடுத்தால்
ஆரோக்கியத்துடன் ரிச்சான
லுக்கும் கிடைக்கும்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக