புதன், 6 மே, 2015

குதிரைவாலி உப்புமா கொழுக்கட்டை

தேவை:

குதிரைவாலி அரிசி - 1 கப் (களைந்து ½ மணி ஊறவைக்கவும்.)
பொடியாக நறுக்கிய காய்கறிகள் (கோஸ், கேரட், காலிஃப்ளவர், பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு) - 1 கப்
தேங்காய்த் துருவல் - 1/2 கப்

ஊற வைத்து அரைக்க

கடலைப் பருப்பு - 2 தேக்கரண்டி,
உளுத்தம்பருப்பு – 1  தேக்கரண்டி
துவரம்பருப்பு - 2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2 அல்லது 3
மேற்கண்ட சாமான்களை தண்ணீரில் ½ மணி நேரம் ஊறவைத்து மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைக்கவும்.

தாளிக்க

தேங்காய் எண்ணை -  4 தேக்கரண்டி
நெய் - 4 தேக்கரண்டி
பெருங்காயம் -  சிறு துண்டு அ 1/4 தேக்கரண்டி
பெருங்காயப் பொடி
கடுகு - 2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 1/2 தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் – 2
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை - 2 கொத்து


செய்முறை

வாணலியில் 4 தேக்கரண்டி தேங்காய் எண்ணையும், 2 தேக்கரண்டி நெய்யும் சேர்த்து விட்டுக் காய்ந்ததும், அதில் பெருங்காயம் போட்டு பொரிந்ததும், கடுகு பொட்டு வெடித்ததும், உ.பருப்பு, க.பருப்பு போட்டு சிவந்ததும், மிளகாய் வற்றல், பச்சை மிளகாய் கிள்ளிப் போட்டு வறுபட்டதும், நறுக்கிய காய்கறிகள், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கியதும் 2 1/2 கப் தண்ணீர் விடவும்.




தண்ணீர் நன்கு கொதித்ததும் தேவையான உப்பு போடவும். 


அதில் அரைத்த பருப்பு கலவை, தேங்காய்த் துருவலை போட்டு நன்கு கிளறவும். அத்துடன் குதிரைவாலி சேர்த்து கெட்டியாகக்  கிளறவும்.மீதமுள்ள 2 தேக்கரண்டி நெய்யையும் விட்டு நன்கு கிளறி இறக்கி வைத்து, ஒரு தட்டினால் அழுத்தி  மூடிவைக்கவும்.


சற்று ஆறியதும் வெந்த உப்புமாவை நன்கு கையால் பிசைந்து, நீள்  உருண்டைகளாக உருட்டவும். குக்கரில் இட்லித்தட்டில் உருண்டைகளை வைத்து மேலே வெயிட் போட்டு 4 சத்தங்கள் வரும்வரை வேக விடவும்.


.



வெளியில் எடுத்து தக்காளி சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.





தக்காளி சட்னி செய்முறை




எண்ணையில் துளி பெருங்காயம், உ.பருப்பு, க.பருப்பு, மிளகாய் வற்றல் வறுத்து, பின்பு தக்காளியையும் நன்கு  வதக்கி, இத்துடன் தேவையான உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். இதற்கு புளி தேவையில்லை. மிளகாய் வற்றலும் அதிகம் வைக்க வேண்டாம். 4 தக்காளிக்கு 2 மிளகாய் வற்றலே போதுமானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக