தேவை
பால்--- 1 லிட்டர்
பால்--- 1 லிட்டர்
அரிசி---3
டேபிள் ஸ்பூன்
சர்க்கரை--- 1 கப்
முந்திரிப் பருப்பு--- 15
பாதாம் பருப்பு---10
ஏலக்காய்--- 8
குங்குமப்பூ--- சிறிது
செய்முறை
பாலை குக்கரில் விட்டு அதில் அரிசியை நன்கு களைந்து போட்டு ஆவி வந்ததும் வெயிட்டைப் போடவும். கேசை சிம்மில் அரை மணி நேரம் வைக்கவும். அணைத்துவிடவும்.
குக்கரைத் திறந்து கேசை சிறிதாக வைத்து சிறிது நேரம் விடாமல் கிளறவும்.
அரிசி வெந்து பால் கெட்டியாகி இளமஞ்சள் நிறமானதும், அதில் சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரைந்து சேர்ந்து கொண்டதும், முந்திரி,பாதாம் பருப்புகளை மிக்சியில் நைசாக அரைத்து சேர்க்கவும்.
ஏலக்காயைப் போடி
செய்து போட்டு,
குங்குமப்பூவை போட்டு
மேலும்
ஐந்து நிமிடம்
கொதிக்க வைத்து
இறக்கவும்.
முந்திரிப் பருப்பை
சீவிப் போட்டு சூடாகவோ,
குளிர வைத்தோ கப்புகளில் ஊற்றி பாயசத்தைப்
பரிமாறவும். பார்ட்டிகளுக்கு
ஏற்ற சுவையான
ரிச்சான பாயசம்
இது!
இதற்கு நல்ல திக்கான பால் தேவை. இல்லையெனில்
சிறிதளவு மில்க்மெய்ட் சேர்த்துக் கொள்ளலாம்.முழுதும் பாலில் செய்யும்போது
இருக்கும் சுவை மில்க்மெய்டில் செய்யும் பாயசத்தில் இருக்காது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக