தேவை
பரங்கிக்கொட்டை - சிறியது - 1
பால் - ½ கப்
தேங்காய்ப்பால் -½ கப்
சர்க்கரை - 4 தேக்கரண்டி
அரிசிமாவு - 1 தேக்கரண்டி
எண்ணை
- 1 தேக்கரண்டி
கடுகு - 1
தேக்கரண்டி
செய்முறை
பரங்கிக்கொட்டை என்பது மிகவும் பிஞ்சான
பரங்கிக்காய். அதை நன்கு அலம்பி தோலுடன் சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
அதை அளவான தண்ணீரில் வேகவிடவும். வெந்தபின்
அதிகமான நீரை வடித்துவிட்டு, சர்க்கரையைச் சேர்க்கவும்.
அத்துடன் பால்,தேங்காய்ப் பால், அரிசிமாவு சேர்த்து கொதிக்க விடவும்.
கெட்டியானதும் இறக்கி எண்ணையில் கடுகு
தாளிக்கவும். தேங்காய்ப்பாலுக்கு பதிலாக அரை மூடி தேங்காயை நைசாக அரைத்தும்
விடலாம்.
இந்த பால்கூட்டு வற்றல் குழம்பு, காரக் குழம்புகளுடன் சாப்பிட ஏற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக