Monday 18 May 2015

அகத்திக் கீரை பொடி

அகத்திக் கீரை வயிற்றுப் புண், வாய்ப்புண்ணுக்கு நல்ல மருந்து. அதனைப்  பொடியாகச் செய்து வைத்துக் கொண்டால் சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.

தேவை

அகத்திக் கீரை---1 கட்டு

(கீரையை நன்கு அலம்பி, ஆய்ந்து சற்று வெய்யிலில் வைத்து காய வைக்கவும். பின் ஈரப்பசை போக நிழலில் உலர்த்தவும்.)




நல்லெண்ணெய்---3 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு---2 தேக்கரண்டி
கடலைப் பருப்பு--- 2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல்----2
மிளகு----1 தேக்கரண்டி
சீரகம்---½ தேக்கரண்டி
பெருங்காயம்---சிறு துண்டு
செய்முறை

நல்லெண்ணையை சுட வைத்து அதில் வரிசையாக பெருங்காயம், உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு, மிளகு, மிளகாய் வற்றல், சீரகத்தை தனித் தனியாக வறுக்கவும்.





மிக்சியில்  வறுத்த சாமான்களுடன், தேவையான உப்பு சேர்த்து கரகரப்பாக பொடிக்கவும். அத்துடன் காய்ந்த அகத்திக் கீரை சேர்த்து நன்கு பொடி செய்யவும்.



 


சாதத்தை ஆற வைத்து, நல்லெண்ணையில் கடுகு, நிலக்கடலை தாளித்து, அத்துடன் அகத்திகீரைப்பொடி சேர்த்து பிசைந்து சாப்பிடவும்.

No comments:

Post a Comment