பொடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 30 மே, 2016

சுக்குமல்லி காபிப் பொடி

தேவை 
கொத்துமல்லி விதை – 2 கப்
மிளகு – 2 கப்
ஜீரகம் – 1 கப்
சுக்கு – ஒரு துண்டு (1 ரூபாய் அளவுள்ளது)
கிராம்பு – 6
ஏலக்காய் – 3

செய்முறை 
எல்லா சாமான்களையும் வெறும் வாணலியில் சற்று சூடுவர வறுத்து, மிக்ஸியில் நைஸாக பொடி செய்யவும்.

1 டம்ளர் சுக்கு காபி தயாரிக்க, ஒரு ஸ்பூன் பொடியை ¾ டம்ளர் நீரில் போட்டு நன்கு கொதிக்க விடவும்.  

நன்கு கொதித்ததும் இறக்கி வடிகட்டி, சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு 2 ஸ்பூன் சேர்த்து, பால் சேர்த்து சாப்பிடவும். 

அஜீரணம், வயிற்றுக் கோளாறு இவைகளுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும். இதே போன்று தயரித்த டிகாக்ஷனில், ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிடவும்.

இந்தப் பொடியை தேவையான அளவு செய்து வைத்துக் கொண்டு குளிர் காலங்களிலும், தொண்டைக்கட்டு, ஜலதோஷத்தின்போதும் போட்டு சாப்பிட்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

தேங்காய் சட்னிப் பொடி


 
தேவை:
உளுத்தம் பருப்பு – 1 கப்
கடலைப் பருப்பு – 1 கப்
துவரம் பருப்பு – 1/2  கப்
கொப்பரைத் தேங்காய் – 1
புளி – ஒரு சிறு எலுமிச்சை அளவு
மிளகாய் வற்றல் – 16
பெருங்காயம் - சிறு துண்டு
தேங்காய் எண்ணெய் - 4 டீஸ்பூன்
உப்பு  -  தேவையான அளவு
வெறும் வாணலியில் பருப்புகளை சிவக்க வறுக்கவும். கொப்பரையைத் துருவி 2 ஸ்பூன் எண்ணெயில் சிவக்க வறுக்கவும். 

மேலும் சிறிது எண்ணெயில் பெருங்காயம், மிளகாய் வற்றலை வறுத்து, பருப்புகள், தேங்காய், மிளகாய் வற்றல், புளி பெருங்காயத்துடன் தேவையான உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். 

இது சாதத்திற்கு பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம். பூரி, சப்பாத்திக்கு இது மிக நன்றாக இருக்கும்.

மணத்தக்காளிவற்றல் பொடி

உப்பு போடாமல் காய வைத்த மணத்தக்காளி வற்றல் 1 கப் அளவிற்கு தேவை
மிளகாய் வற்றல் – 10
உளுத்தம் பருப்பு – 6 ஸ்பூன்
மிளகு – 1 ஸ்பூன்
ஜீரகம் – 1 ஸ்பூன்
பெருங்காயம் சிறிது
உப்பு  தேவையான அளவு 
நல்லெண்ணெய்  4 டீஸ்பூன் 
 
செய்முறை 
நல்லெண்ணெயில் மணத்தக்காளி வற்றல், மிளகாய் வற்றல், பெருங்காயம், மிளகு, சீரகத்தை வறுக்கவும்.

உப்புடன் வறுத்த மணத்தக்காளி வற்றல், மிளகாய் வற்றல், பெருங்காயம், மிளகு, சீரகத்தை முதலில் அரைத்துக் கொண்டு, பின்பு உளுத்தம் பருப்பைப் போட்டு சற்று கரகரப்பாக அரைத்து எடுக்கவும். 

ஒரு ஸ்பூன் நெய் அல்லது நல்லெண்ணெய் சாதத்தில் ஊற்றி இப்பொடியுடன் பிசந்து சாப்பிட வயிற்றுக் கோளாறுகள், பேதி இவை உடன் சரியாகும். 

மணத்தக்காளி இலையைக் காய வைத்தும், மேற்கூறியபடி பொடி செய்து சாப்பிட வாய்ப்புண், வயிற்றுப் புண் இவை நீங்கும்.

கொத்துமல்லி பொடி

ஒரு கப் அளவு பச்சை கொத்துமல்லி தழையை வேர் நீக்கி சுத்தம் செய்து, அலம்பி வெயிலில் நன்கு காய வைக்கவும். 

ஒரு கப் அளவு கொத்துமல்லிக்கு எண்ணெயில் வறுக்க வேண்டிய சாமான்கள்: மிளகாய் வற்றல் – 15
உளுத்தம் பருப்பு – 4 ஸ்பூன்
கடலைப் பருப்பு – 6 ஸ்பூன் 
புளி – கொட்டைப் பாக்களவு
பெருங்காயம் சிறிது
உப்பு தேவையான அளவு
மிளகாய் வற்றல், பெருங்காயம், உப்பு, புளியைப் போட்டு மிக்ஸியில் அரைக்கவும்.

நைஸானதும் கொத்துமல்லித் தழையைப் போட்டு அரைக்கவும். கடைசியாக பருப்புகளைப் போட்டு அரைக்கவும். 

பருப்புகளை சற்று கரகரப்பாக அரைக்க வேண்டும். இந்த கொத்துமல்லி பொடி சற்று ஈரப்பசையோடு இருக்கும். பிரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரை வைத்துக் கொள்ளலாம். 

பிசைந்து சாப்பிடவும், தோசை, இட்லி, சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளவும் மிக நன்றாக இருக்கும்.

திங்கள், 23 மே, 2016

வல்லாரைப்பொடி

தேவை
ஆய்ந்து சுத்தம் செய்த வல்லாரை கீரை – 3 கப்
கடலைப்பருப்பு – 8 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு –4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5
மிளகு - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
புளி – சிறிது
பெருங்காயம் – சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் – வறுக்க.
செய்முறை:
வல்லாரை கீரையை நன்றாக சுத்தம் செய்து வெய்யிலில் வைத்து  காயவைக்கவும். 
பிறகு, வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, பருப்புகள், மிளகு, சீராக, பெருங்காயத்தை தனித்தனியாக வறுத்தெடுக்கவும்.  புளியையும் வெறும் வாணலியில் வறுக்கவும். 
ஆறியவுடன், முதலில் பருப்பு, மிளகாய், உப்பு, புளி.. ஆகியவற்றை ஒன்றாகப் பொடித்து, கடைசியாக வல்லாரை இலைகளையும் போட்டு பொடித்தெடுக்கவும்.
வல்லாரை ஞாபக சக்திக்கு நல்லது. படிக்கும் குழந்தைகளுக்கு நெய்யுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட சொல்லலாம். மறதிக்கு நல்ல மருந்து.

கடலைப்பொடி


தேவை
வேர்க்கடலை – ஒரு கப்
உளுத்தம்பருப்பு – கால் கப்
கடலைப்பருப்பு – கால் கப்
காய்ந்த மிளகாய் – 6
பெருங்காயம் – ஒரு கட்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
முதலில் வெறும் வாணலியில் வேர்க்கடலையை வறுக்கவும். 
பிறகு எண்ணெயில், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை பொன்னிறமாக வறுக்கவும். 
வறுத்த பருப்புகளை உப்பு கலந்து மிக்ஸியில் பொடிசெய்யவும். கடைசியாக, அதோடு வேர்க்கடலையையும் சேர்த்துப் பொடிக்கவும். 
கறிவகைகள், கூட்டு செய்யும்போது, இந்தப் பொடியில் ஒரு ஸ்பூன் போட்டால் வித்தியாசமான டேஸ்ட்டில் ருசியாக இருக்கும்

முடக்கத்தான்பொடி

தேவையானவை:
முடக்கத்தான் இலை – 2 கப் 
உளுத்தம்பருப்பு – 8 டீஸ்பூன்

துவரம்பருப்பு – கால் கப்

கட்டிப் பெருங்காயம் – சிறு துண்டு
மிளகு - 2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 3
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
முடக்கத்தான் இலைகளை நன்றாக சுத்தம் செய்து ஈரம் போக காயவைக்கவும்.
வாணலியில் தலா கால் டீஸ்பூன் எண்ணெய் விட்டு, பருப்புகளை தனியே வறுத்தெடுக்கவும். 
முடக்கத்தான் இலைகளையும் வெறும் வாணலியில் சிறிய தீயில் வைத்து நன்றாக வதக்கவும். 
ஆறியவுடன், முதலில் பருப்பு, உப்பு, மிளகாய் வகைகளை ஒன்றாகப் பொடித்து, கடைசியாக முடக்கத்தான் இலைகளையும் போட்டுப் பொடித்து எடுக்கவும். 
வாயுக் கோளாறு, முழங்கால் வலிக்கு மிகச் சிறந்த நிவாரணி இந்தப் பொடி. சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடலாம்.

வெள்ளி, 20 மே, 2016

சூப் பொடி

தேவை
கார்னஃப்ளார்- 100 கிராம்,
மிளகு- 75 கிராம்,
பட்டை-2, லவங்கம்- 4,
சுக்கு - ஒரு  துண்டு 
ஏலக்காய் -3
உப்பு- 2 ஸ்பூன்,
செய்முறை:
மிளகு,பட்டை,லவங்கம், சுக்கு, ஏலம்  இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து பொடி செய்து கார்ன்ஃப்ளார் மாவில் கலந்து வைத்து கொள்ளவும்.
எந்த வகை சூப் செய்தாலும், இந்த பொடி போட்டு செய்யவும். சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.
இந்த பொடி இருந்தால், 5 நிமிடத்தில் சூப் ரெடி செய்து விடலாம்.
எல்லா வகை சூப்புக்கும் ஏற்ற பொடி இது.
உப்பு, மிளகுதூளை அதிகம் வேண்டுமெனில் சூப்பில் போட்டு கொள்ளலாம்.

வியாழன், 19 மே, 2016

பொட்டுக்கடலைப் பொடி

தேவை
பொட்டுக்கடலை  -  1 கப்
கொப்பரை  -  1/2 கப்
மிளகாய் வற்றல்  -  10
மிளகு  -  1 டீஸ்பூன்
பெருங்காயம்  -  சிறு துண்டு
உப்பு
எண்ணெய்   -  1 டீஸ்பூன்
செய்முறை
எண்ணெயில் மிளகு, மிளகாய் வற்றல், பெருங்காயம் வறுத்து எடுத்து அதிலேயே பொட்டுக்கடலை,  கொப்பரைத் துருவல் சேர்த்து கிளறி, அடுப்பை அனைத்து விடவும்.
இரண்டு முறை கிளறி விடவும். ஆறியதும் தேவையான உப்புடன் சேர்த்து மிக்சியில் நைசாக அரைக்கவும்.
சாதத்தில் பிசைந்து சாப்பிட ருசியாக இருக்கும்.









கரம்மசாலாப்பொடி

தேவையானவை
தனியா – அரை கப்
பட்டை – 2 துண்டு
கிராம்பு – 10
ஏலக்காய் – 10
சோம்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
கசகசா – 2 டீஸ்பூன்
மிளகு – 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 10
மராட்டி மொக்கு – 2
சீரகம் – ஒரு டேபிள்ஸ்பூன்
பிரிஞ்சி இலை – 2
செய்முறை
மேற்கூறிய பொருட்களை வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து, ஒன்றாக சேர்த்து அரைத்து, நைசாக  சல்லடையில் சலித்து வைத்துக்கொள்ளவும்.
இத்தூளை வாசனை போகாதபடி இறுக மூடி வைத்துக் கொள்ளவும்.
இதை சப்பாத்திக்கு செய்யும் சப்ஜி, மசாலா குழம்பு, குருமா இவற்றிற்கு சேர்க்கலாம்.


பஞ்சாபி கரம் மசாலா பொடி

தேவையான பொருட்கள் :
பட்டை-சிறியதாக ஒரு துண்டு
ஜாதிக்காய் -  4
ஏலக்காய் - 8
ஜீரகம் - ஒரு மேஜை கரண்டி
சோம்பு- 3 டீஸ்பூன்
பிரிஞ்சி இலை - 5
கொத்தமல்லி விதை - 2 டீஸ்பூன்
மிளகு -2 டீஸ்பூன்
கிராம்பு - 10
சுக்கு  -  சிறுதுண்டு
கருப்பு உப்பு (அ) கல் உப்பு - 1 ஸ்பூன்
செய்முறை:
இவை எல்லாவற்றையுமே தனித் தனியாக வெயிலில் உலர்த்திக் கொண்டு, மிக்சியிலேயே தனித் தனியாக பொடிக்கவும். 
நல்ல நைசாக பொடி செய்து கலந்து வைத்துக் கொள்ளவும். சன்னா மசாலா போன்ற சப்ஜிகளில் சேர்க்க வித்யாசமான சுவை கிடைக்கும்.

ஆந்திரா பருப்பு பொடி

தேவை
 துவரம் பருப்பு  -  1 கப்
 கடலை பருப்பு -  1/4 கப்
மிளகாய் வற்றல்  -  12
மிளகு - 3 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
பூண்டு - 15 - 20
நல்லெண்ணெய்  -  2 டீஸ்பூன்
உப்பு
செய்முறை:
எண்ணையைக் காயவைத்து பருப்புகள், மிளகாய் வற்றல், மிளகு, சீரகம் வறுத்து எடுத்து வைக்கவும்.
பூண்டு பற்களை உரித்து எண்ணையில் தனியாக நன்கு வதக்கவும்.
எல்லாவற்றையும் உப்பு சேர்த்து மிக்ஸியில்  நைசாக அரைக்கவும். பூண்டு வாசனையுடன் இந்த ஆந்திரா பருப்புபொடியை சாதத்தில் நெய்யை விட்டு பிசைந்து பொரித்த அப்பளத்துடன் சாப்பிட சூப்பர் சுவையாக இருக்கும்.

புதன், 18 மே, 2016

தோசை மிளகாய் பொடி

தேவை
மிளகாய் வற்றல் -  50 கிராம் 
கடலை பருப்பு - அரை கப் 
உளுத்தம் பருப்பு - அரை கப்புக்கு கொஞ்சம் குறைவாக 
கருப்பு எள் - கால் கப்
பெருங்காயம் ஒரு சின்ன துண்டு
உப்பு - தேவையான அளவு 
புளி - கொட்டைப்பாக்கு அளவு 
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்
செய்முறை
கருப்பு எள்ளை நன்கு களைந்து,கல் அரித்து வடிகட்டவும்.
வறட்டு வாணலில் 'பட பட' வென பொரியும் வரை வறுக்கவும்.
வாணலில் எண்ணெய் விட்டு பெருங்காயத்தை பொரித்து எடுத்து அதிலேயே உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பை சிவக்க வறுக்கவும்.
மிளகாய் வற்றலைக் காம்பை நீக்கி கருகாமல் வறுக்கவும்.
முதலில் எள்ளை மிக்ஸியில் லேசாக ஒரு சுற்று சுற்றி பொடி செய்யவும். அதிகமாக அரைத்தால் நீர் விட்டு கொழகொழப்பாகிவிடும்.
பருப்புகளை சற்று கரகரப்பாகப் பொடி செய்து எடுக்கவும். பெருங்காயம், மிளகாய் வற்றல், உப்பு, புளி சேர்த்து நல்ல நைசாக அரைக்கவும்.
கடைசியில் சர்க்கரை சேர்த்து ஒரு சுற்று சுற்றி, அரைத்த எள், பருப்புகளை சேர்த்து விப்பரில் அரைத்து நன்கு கலந்து எடுத்து வைக்கவும்.
இட்லி, தோசைக்கு சுவையான மிளகாய்ப்பொடி இது. தயிர் சாதத்திற்கும் நல்ல மேட்ச்!




செவ்வாய், 17 மே, 2016

கறிவேப்பிலைப்பொடி

தேவை
நன்றாக காய்ந்த கறிவேப்பிலை இலை – 2 கப்  
உளுத்தம்பருப்பு – 1/4  கப் 
காய்ந்த மிளகாய் – 10 
பெருங்காயம் – சிறிதளவு
சீரகம் - 2 டீஸ்பூன் 
தனியா - 1 டீஸ்பூன் 
புளி  - சிறிது 
வறுத்த எள் - 1 டீஸ்பூன்
 உப்பு – தேவையான அளவு
 எண்ணெய் – வறுக்க.
செய்முறை:
கறிவேப்பிலையை சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி நன்றாகக் காயவைக்கவும். காய்ந்த பிறகு மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். 
வாணலியை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், சீரகம், தனியா, பெருங்காயத்தை வறுக்கவும். முதலில் கறிவேப்பிலையை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். 
பிறகு வறுத்த பொருட்களை உப்பு சேர்த்து சிறிது கரகரப்பாக அரைத்து, அதில் கறிவேப்பிலை பொடி சேர்த்து ஒரு சுற்று சுற்றி கலந்து எடுத்து வைக்கவும்.

ஜீரணப்பொடி

தேவையானவை:
சீரகம் – கால் கப்
எலுமிச்சம்பழம் – 6
இஞ்சி – 25 கிராம்
செய்முறை:
இஞ்சியை நன்கு அலம்பி , தோலை நீக்கி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். சீரகத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு இஞ்சி சாறை ஊற்ற வேண்டும். மேலேயே எலுமிச்சம்பழ சாறையும் ஊற்ற வேண்டும். இஞ்சி மற்றும் எலுமிச்சம்பழ சாறில், சீரகம் நன்றாக மூழ்கி இருக்க வேண்டும். இதை அப்படியே ஒரு நாள் ஊற வைக்க வேண்டும்.
பிறகு சீரகத்தை தனியே வடித்தெடுத்து நிழலில் உலர்த்த வேண்டும். மாலையில், இதை எடுத்து மீதமுள்ள எலுமிச்சை, இஞ்சி சாறில் மீண்டும் ஊற வைக்க வேண்டும். அந்த சாறு முழுமையாக வற்றும் வரை தொடர்ந்து 5 அல்லது 6 நாட்கள் இப்படியே ஊறவைத்து, உலர்த்த வேண்டும்.
நன்கு உலர்ந்த சீரகத்துடன் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுத்துச் சேர்த்து அரைத்து, உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். இந்தப் பொடியை தயாரித்து வைத்துக்கொண்டால் தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த சீரக பருப்புப்பொடியை சுடச் சுடச் சாதத்தில் நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டால் அருமையாக  இருக்கும். ஜீரணக் கோளாறுகளை நீக்கும். வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து உபாதைகளுக்கும், பித்தம், ஏப்பம், தலைச்சுற்றல் போன்றவற்றையும் சரிப் படுத்தும் நல்ல மருந்தாகும் இது.

சனி, 7 மே, 2016

மிக்ஸட் பருப்பு பொடி

தேவை
துவரம்பருப்பு – ஒரு கப்
கடலைப்பருப்பு – ஒரு கப்
உளுத்தம் பருப்பு -- ½ கப்
கொள்ளு - ½ கப்
காய்ந்த மிளகாய் – 15
மிளகு – 4 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறுதுண்டு
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு,கொள்ளு  இவைகளை சிவக்க வறுத்துக்கொண்டு, காய்ந்த மிளகாய், மிளகு இவைகளையும் வறுத்து, பெருங்காயம், உப்பு கலந்து சேர்த்து அரைக்கவும்.  சாதத்தோடு பிசைந்து சாப்பிடலாம்.  நாள்பட கெடாமலும் இருக்கும்.
வித்யாசமான பருப்புபொடி இது.

புதினாப்பொடி

தேவை
புதினா இலைகள்  – ஒரு  கப்
உளுத்தம்பருப்பு – 4 டேபிள்ஸ்பூன்
கடலைப் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - சிறுதுண்டு
மிளகு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – வறுக்க.
செய்முறை:
புதினா இலையை அலம்பி, நன்றாக ஆய்ந்து, நிழல் காய்ச்சலாக நன்றாக காய வைக்கவும். 2,3 நாளில் நன்கு காய்ந்துவிடும்.

வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி பெருங்காயம்,உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, மிளகு,  மிளகாய் வற்றலைப் போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.

காய்ந்த புதினா இலையை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்து எடுத்து வைக்கவும்.

வறுத்த பருப்புகள் ,மிளகாய் வற்றல் , உப்பு போட்டு சற்றுகரகரப்பாக அரைக்கவும்.

அதில் அரைத்த புதினாப்பொடி சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

சாதத்தில் நெய் விட்டு பிசைந்து சாப்பிடவும்.

வயிற்றுப் பொருமல், வாயுத்தொல்லைக்கு புதினா நல்லது.


வெள்ளி, 6 மே, 2016

காரக்குழம்புப்பொடி

தேவை
மிளகாய் வற்றல்  – 1 கிலோ
தனியா – 500 கிராம்
சீரகம் – அரை  கப்
மிளகு – கைநிறைய
காய்ந்த வேர்க்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன்
துவரம்பருப்பு  -  1/4 கப்
மஞ்சள் பொடி - 20 கிராம்
கறிவேப்பிலை -  சில கொத்துகள்

செய்முறை:
மிளகாய் வற்றல், தனியா, சீரகம், மிளகு, வேர்க்கடலை ஆகியவற்றை தனித்தனியே வெறும் வாணலியில் நன்றாக வறுத்துக்கொள்ளவும்.
கறிவேப்பிலையை மொறுமொறுப்பாக வறுக்கவும்.
பிறகு எல்லாவற்றையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். காரக்குழம்பு, புளிக்குழம்பு போன்றவற்றுக்கு இந்தப் பொடியைச் சேர்த்துக்கொண்டால் குழம்பு மணக்கும்.

செவ்வாய், 3 மே, 2016

சாம்பார்பொடி




    மிளகாய் வற்றல்-- 1/2 கிலோ
    தனியா(கொத்தமல்லி விதை)--- 3/4 கிலோ
    துவரம்பருப்பு--- 1 கப்
    கடலைப் பருப்பு-- 3/4 கப் 
    உளுத்தம்பருப்பு-- 1/2 கப்    
    வரளி மஞ்சள்--- 100 கிராம்
    மிளகு--- 1 கைப்பிடி
    வெந்தயம்--- 25 கிராம்

    எல்லா சாமான்களையும் நன்கு வெய்யிலில் காயவைத்து மிஷினில் அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்....சாம்பார், வத்தக் குழம்பு, பொரித்த குழம்பு எல்லாவற்றிற்கும் போடலாம்.
காரம் அதிகமாக வேண்டுமெனில் இன்னும் அதிகமாக மிளகாய் வற்றல் சேர்த்து அரைக்கவும்.

ஞாயிறு, 1 மே, 2016

வாழைக்காய் பொடி

தேவை

வாழைக்காய்-- 1
துவரம்பருப்பு-- 1/2 கப்
கடலைப் பருப்பு-- 1/4 கப்
பெருங்காயம்--- சிறுதுண்டு
மிளகாய்  வற்றல்--- 3
எண்ணை-- 3 தேக்கரண்டி
உப்பு-- தேவையான  அளவு


செய்முறை

வாழைக்காயை தோலியுடன்   இரண்டாக  நறுக்கி  வேகவிடவும்


.
ஆறியதும்  தோலியை  உரித்து  உதிர்க்கவும்.



எண்ணையில்  பெருங்காயம்,  மிளகாய்  வற்றலையும், துவரம்பருப்பையும்,
கடலைப்  பருப்பையும்  தனித்தனியாக  சிவக்க  வறுக்கவும்.
இத்துடன்  தேவையான  உப்பு   சேர்த்து  மிக்ஸியில்  பொடி  செய்யவும்.



உதிர்த்த  வாழைக்காய்,  பருப்புப் பொடி  இரண்டையும்  ஒன்றாகக்  கலந்து கைகளால்  நன்கு  கலக்கவும்.


நன்கு  உதிர்ந்துவிடும்.


இந்தப்பொடி  சாதத்துடன்  பிசைந்து  சாப்பிடவும்,  தயிர்  சாதத்துக்கு தொட்டுக்  கொள்ளவும்  அருமையாக  இருக்கும்.