தேவையானவை:
சீரகம் – கால் கப்
எலுமிச்சம்பழம் – 6
இஞ்சி – 25 கிராம்
சீரகம் – கால் கப்
எலுமிச்சம்பழம் – 6
இஞ்சி – 25 கிராம்
செய்முறை:
இஞ்சியை நன்கு அலம்பி , தோலை நீக்கி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். சீரகத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு இஞ்சி சாறை ஊற்ற வேண்டும். மேலேயே எலுமிச்சம்பழ சாறையும் ஊற்ற வேண்டும். இஞ்சி மற்றும் எலுமிச்சம்பழ சாறில், சீரகம் நன்றாக மூழ்கி இருக்க வேண்டும். இதை அப்படியே ஒரு நாள் ஊற வைக்க வேண்டும்.

பிறகு சீரகத்தை தனியே
வடித்தெடுத்து நிழலில் உலர்த்த வேண்டும். மாலையில்,
இதை எடுத்து மீதமுள்ள எலுமிச்சை, இஞ்சி சாறில் மீண்டும் ஊற வைக்க வேண்டும்.
அந்த சாறு முழுமையாக வற்றும் வரை தொடர்ந்து 5 அல்லது 6 நாட்கள் இப்படியே
ஊறவைத்து, உலர்த்த வேண்டும்.
நன்கு உலர்ந்த
சீரகத்துடன் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுத்துச்
சேர்த்து அரைத்து, உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். இந்தப் பொடியை தயாரித்து வைத்துக்கொண்டால்
தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த
சீரக பருப்புப்பொடியை சுடச் சுடச் சாதத்தில் நெய் சேர்த்துப் பிசைந்து
சாப்பிட்டால் அருமையாக இருக்கும். ஜீரணக் கோளாறுகளை நீக்கும்.
வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து உபாதைகளுக்கும், பித்தம், ஏப்பம், தலைச்சுற்றல் போன்றவற்றையும் சரிப் படுத்தும் நல்ல மருந்தாகும் இது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக