தேவை:
பூண்டு -- 100 கிராம்
குழம்பு கருவடாம் -- 100 கிராம்
சின்ன வெங்காயம் -- 20
வெந்தயம், கடுகு -- தலா ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு -- 2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் -- 4
வற்றல் குழம்பு பொடி -- 4 டேபிள்ஸ்பூன்
புளி ஒரு எலுமிச்சம்பழ அளவு
நல்லெண்ணெய் -- 50 மில்லி
உப்பு -- தேவையான அளவு.
பூண்டு -- 100 கிராம்
குழம்பு கருவடாம் -- 100 கிராம்
சின்ன வெங்காயம் -- 20
வெந்தயம், கடுகு -- தலா ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு -- 2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் -- 4
வற்றல் குழம்பு பொடி -- 4 டேபிள்ஸ்பூன்
புளி ஒரு எலுமிச்சம்பழ அளவு
நல்லெண்ணெய் -- 50 மில்லி
உப்பு -- தேவையான அளவு.
செய்முறை:
பூண்டு, சின்ன வெங்காயத்தை தோல் உரித்து இரண்டு
துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், குழம்புவடாம், கடலைப்பருப்பு சேர்த்து, மிளகாயை கிள்ளிப் போட்டு…
வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி… இதனுடன் வற்றல் குழம்பு பொடி சேர்த்துக்
கிளறவும். பிறகு, புளியைக் கரைத்து விட்டு, உப்பு சேர்த்துக்
கொதிக்கவிடவும். கெட்டியானதும் இறக்கவும்.மேலே இரண்டு ஸ்பூன் எண்ணெய் விடவும்.
குறிப்பு: இதயத்தைக் காக்கும் சிறந்த மருத்துவக் குணம்
பூண்டுக்கு உண்டு. இதயக் கோளாறு உள்ளவர்கள், அடிக்கடி பூண்டை உணவில்
சேர்த்துக்கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக