தேவை
துவரம் பருப்பு - ¼ கப்
புளி – எலுமிச்சை அளவு
மைசூர் ரசப்பொடி - 2½ ஸ்பூன்
தக்காளி – 1
உப்பு, பெருங்காயம், கருவேப்பிலை, கொத்துமல்லி, கடுகு, நெய்
மிளகாய் வற்றல் – 2
தேங்காய் – 3 டீஸ்பூன் (சிவக்க எண்ணெயில் வறுக்கவும்)
செய்முறை
புளியை 2 கப் நீரில் கரைத்து, உப்பு, தக்காளி, பெருங்காயம்,
கருவேப்பிலை போட்டுக் கொதிக்கும்போது, மைசூர் ரசப்பொடியுடன் வறுத்த தேங்காய்
சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்துச் சேர்க்கவும்.
புளி வாசனை போய் ரசம் 1½ கப் ஆனபின் துவரம் பருப்பை 2½ கப் நீர்
சேர்த்து விளாவி, நுரைத்து வந்தபின் இறக்கி நெய்யில் கடுகு, மிளகாய் வற்றல்
போன்றவற்றை தாளித்து கொத்துமல்லி,கறிவேப்பிலை கிள்ளிப் போடவும்.
மைசூர் ரசப்பொடி இல்லையெனில் 1½ டீஸ்பூன் கடலைப் பருப்பு, 2
டீஸ்பூன் தனியா, 3 மிளகாய் வற்றல், 10 மிளகு, சீரகம் 1 டீஸ்பூன், பெருங்காயம் –
சிறு துண்டு, 2 டேபிள்ஸ்பூன் தேங்காய்த் துருவலை எண்ணெயில் சிவக்க வறுத்து அரைத்து விடவும்.
இதில் புளி ஜலம் கொதிக்கும்போது பிஞ்சு கத்தரிக்காய்களை
நறுக்கிப் போட்டால் கத்திரி ரசம்!
பைனாப்பிள் துண்டங்களை நறுக்கிப் போட்டால் பைனாப்பிள் ரசம்!
ரோஜா இதழ்களை சேர்த்தால் பன்னீர் ரசம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக