சனி, 7 மே, 2016

கத்தரிக்காய் ரசவாங்கி

தேவை
கத்தரிக்காய் -- ¼ கிலோ
துவரம் பருப்பு -- ¼ கப்
புளி -- நெல்லிக்காய் அளவு
சாம்பார் பொடி -- ½ தேக்கரண்டி

வறுத்து அரைக்க
பெருங்காயம் -- சிறு துண்டு
கடலைப் பருப்பு -- 1 தேக்கரண்டி
தனியா -- 1½ தேக்கரண்டி
மிளகாய் வற்றல் -- 2
தேங்காய்த் துருவல்-- 4 தேக்கரண்டி
எண்ணை -- 2 தேக்கரண்டி

தாளிக்க
கடுகு -- 1 தேக்கரண்டி
கடலைப் பருப்பு -- 1 தேக்கரண்டி
தேங்காய் எண்ணை -- 1½ தேக்கரண்டி
உப்பு -- தேவையான அளவு
கறிவேப்பிலை

செய்முறை
கத்தரிக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

துவரம் பருப்பை வேக விடவும்.

வறுக்க வேண்டிய சாமான்களை எண்ணையில் வறுத்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். 

புளியைக் கரைத்துவிட்டு கத்தரிக்காய்த் துண்டங்களை அதில் போடவும். முழுகும் அளவு தண்ணீர் இருக்க வேண்டும். 

தேவையான உப்பு, சாம்பார்பொடியை சேர்த்து கொதிக்க விடவும். 

கத்தரிக்காய் வெந்ததும் அதில் அரைத்த கலவையையும், வெந்த பருப்பையும் சேர்த்துக் கொதிக்க விடவும். 

எல்லாம் சேர்ந்து கொண்டு கூட்டு பதம் வந்ததும் இறக்கி, தே.எண்ணையில் கடுகு, கடலைப் பருப்பு தாளிக்கவும். 

கறிவேப்பிலையைக் கிள்ளிப் போட்டு சாதத்துடன் பரிமாறவும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக