தேவை
தக்காளி -- 8
வெங்காயம் -- 5
மிளகாய்த் தூள் -- 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் -- 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் -- சிறிது
கடுகு -- 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் --5 மேசைக்கரண்டி
உப்பு -- தேவையான அளவு
செய்முறை
தக்காளி, வெங்காயத்தை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கவும்.
ஒரு வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்குங்கள்.
இதில் தக்காளியும் சேர்த்து சற்று வதக்கவும்.
வெங்காயம், தக்காளி கலவையை மிக்சியில் நைசாக அரைக்கவும்.
வாணலியில் மீதி எண்ணெய் விட்டு பெருங்காயம், கடுகு தாளிக்கவும்.
அதில் அரைத்த விழுது சேர்த்து மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
இந்தக் கலவை நன்றாக வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் சமயம் அடுப்பிலிருந்து இறக்குங்கள்.
சப்பாத்தி, இட்லி, தோசைக்கு அருமையான மேட்ச் இந்தத் தொக்கு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக