தேவை
ஆப்பிள் சிறிதாக 1
புளி பெரிய நெல்லிக்காய் அளவு
ரசப்பொடி 2 டீஸ்பூன்
துவரம்பருப்பு 2 டீஸ்பூன்
சிறிய தக்காளி 1
பெருங்காயப்பொடி 2 சிட்டிகை
உப்பு தேவையான அளவு
தாளிக்க
நெய் 2 டீஸ்பூன்
கடுகு 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் 2
கொத்துமல்லி, கறிவேப்பிலை
செய்முறை
துவரம்பருப்பை மஞ்சள்பொடி சேர்த்து வேகவிடவும். பாதி ஆப்பிளை சிறு துண்டுகளாக்கவும். மீதி பாதியை மிக்சியில் அரைத்து கூழாக்கவும்.
புளியை இரண்டு கப் நீரில் கரைக்கவும்.
அத்துடன் பெருங்காயம், உப்பு, ரசப்பொடி, நறுக்கிய தக்காளி, ஆப்பிள் துண்டுகள் சேர்த்து கொதிக்க விடவும்.
புளிவாசனை போகக் கொதித்து ரசம் ஒன்றரை கப் ஆனதும், அரைத்த ஆப்பிள் கூழுடன் வெந்த பருப்பு, ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து விடவும்.
பொங்கி வந்ததும் இறக்கி, நெய்யில் கடுகு, சீரகம்,பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
கொத்துமல்லி கிள்ளிப் போட்டு சூடாக அருந்தவும், சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் மிக நன்றாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக