சனி, 7 மே, 2016

புதினாப்பொடி

தேவை
புதினா இலைகள்  – ஒரு  கப்
உளுத்தம்பருப்பு – 4 டேபிள்ஸ்பூன்
கடலைப் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - சிறுதுண்டு
மிளகு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – வறுக்க.
செய்முறை:
புதினா இலையை அலம்பி, நன்றாக ஆய்ந்து, நிழல் காய்ச்சலாக நன்றாக காய வைக்கவும். 2,3 நாளில் நன்கு காய்ந்துவிடும்.

வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி பெருங்காயம்,உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, மிளகு,  மிளகாய் வற்றலைப் போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.

காய்ந்த புதினா இலையை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்து எடுத்து வைக்கவும்.

வறுத்த பருப்புகள் ,மிளகாய் வற்றல் , உப்பு போட்டு சற்றுகரகரப்பாக அரைக்கவும்.

அதில் அரைத்த புதினாப்பொடி சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

சாதத்தில் நெய் விட்டு பிசைந்து சாப்பிடவும்.

வயிற்றுப் பொருமல், வாயுத்தொல்லைக்கு புதினா நல்லது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக