Monday 30 May 2016

சுக்குமல்லி காபிப் பொடி

தேவை 
கொத்துமல்லி விதை – 2 கப்
மிளகு – 2 கப்
ஜீரகம் – 1 கப்
சுக்கு – ஒரு துண்டு (1 ரூபாய் அளவுள்ளது)
கிராம்பு – 6
ஏலக்காய் – 3

செய்முறை 
ல்லா சாமான்களையும் வெறும் வாணலியில் சற்று சூடுவர வறுத்து, மிக்ஸியில் நைஸாக பொடி செய்யவும்.

1 டம்ளர் சுக்கு காபி தயாரிக்க, ஒரு ஸ்பூன் பொடியை ¾ டம்ளர் நீரில் போட்டு நன்கு கொதிக்க விடவும்.  

நன்கு கொதித்ததும் இறக்கி வடிகட்டி, சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு 2 ஸ்பூன் சேர்த்து, பால் சேர்த்து சாப்பிடவும். 

அஜீரணம், வயிற்றுக் கோளாறு இவைகளுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும். இதே போன்று தயரித்த டிகாக்ஷனில், ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிடவும்.

இந்தப் பொடியை தேவையான அளவு செய்து வைத்துக் கொண்டு குளிர் காலங்களிலும், தொண்டைக்கட்டு, ஜலதோஷத்தின்போதும் போட்டு சாப்பிட்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

No comments:

Post a Comment