வெள்ளி, 27 மே, 2016

மட்டர் பனீர்




பனீர்  -  150 கிராம்
பட்டாணி  -  1 கப்
தக்காளி -  2
பெரிய வெங்காயம்  -  2
இஞ்சி  - சிறு துண்டு
பச்சை மிளகாய்  - 2
 பூண்டு - 4 பல்
மிந்திரி விழுது  - 2 டீஸ்பூன்
ஜீரகம்  - 1 டீஸ்பூன்
மஞ்சள்பொடி  -  1 டீஸ்பூன்
தனியாபொடி  - 1 1/2 டீஸ்பூன்
காரப்பொடி   - 2  டீஸ்பூன்
கரம்மசாலா  - 1 டீஸ்பூன்
உப்பு  -  தேவையான அளவு
எண்ணெய் -  6 டீஸ்பூன்
வெண்ணெய்  -  3 டீஸ்பூன்
பால்  - 1/2 கப்
கொத்துமல்லி
செய்முறை
பட்டாணியை வேக வைக்கவும். பனீரை சிறு சதுர துண்டுகளாக்கவும். முந்தியை சிறிது வெந்நீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.


3 டீஸ்பூன் எண்ணெயில் இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு வதக்கி, அதில் நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.
நன்கு வதக்கியதும் அத்துடன் நறுக்கிய தக்காளி சேர்த்து  வதக்கி மிக்சியில் அரைக்கவும்.


வெண்ணையுடன் மீதமுள்ள எண்ணெய் சேர்த்து அதில் அரைத்த தக்காளி, வெங்காய விழுது சேர்த்து நன்கு எண்ணெய் பிரிய வதக்கவும். அதில் மஞ்சள்பொடி, தனியாபொடி, காரப்பொடி, கரம் மசாலா சேர்க்கவும்.


நன்கு சேர்ந்து கொண்டதும் முந்திரி விழுது, பால் மற்றும் தேவையான அளவு நீர் சேர்க்கவும். கொதித்ததும் வெந்த பட்டாணி சேர்த்து கிளறவும்.




எல்லாம் சேர்ந்து கெட்டியானதும், பனீர் துண்டுகளை சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க விடவும்.



பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து மேலே சிறிது வெண்ணெய் சேர்த்து சப்பாத்தி, நான், பூரியுடன் பரிமாறவும்.




 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக